இடுகைகள்

அமர்த்தியாசென் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களின் கையிலிருந்து அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விட்டது! அமர்த்தியாசென்

படம்
  அமர்த்தியா சென் பொருளாதார வல்லுநர் பெருந்தொற்றுகாலம் உங்களது கல்வி கற்பித்தலை எப்படி பாதித்துள்ளது? நான் நேரடியாக மாணவர்களுடன் உரையாடி பாடம் கற்றுத்தருவதை மட்டுமே விரும்புகிறேன். ஆனால் பெருந்தொற்று காரணமாக அனைத்தும் ஜூமில்தான் நடைபெறுகிறது. இதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது  என்று தெரியவில்லை. இப்போது நான மாசாசூசெட்ஸ் வீட்டிலேயே தங்கும்படி ஆகிவிட்டது. சாந்தி நிகேதனிலுள்ள எனது சிறிய வீட்டிற்கு நான் செல்ல விரும்புகிறேன்.  உங்களது நூலில் இளமைக்காலத்தில் நீங்கள் செய்த பயணம், பார்த்த ஆறுகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அறிவுப்பூர்வமான பயணமாக இக்காலகட்டம் அமைந்ததா? சாந்தி நிகேதன் எப்போதும் அமைதியாக இருக்கும். எனது ஆளுமைக்கு அது உதவியது. அங்கு மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கினார்கள். தேர்வில் முன்னணியில் வரவேண்டும் என்பது முக்கியமல்ல. டாகாவில் உள்ள செயின்ட் கிரிகோரி பள்ளியில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற ஊக்குவித்தனர். எனக்கு நான் படித்த இரண்டு பள்ளிகளுமே பிடிக்கும்தான் என்றாலும் சாந்தி நிகேதன் கொடுத்த சுதந்திரம் உலகை அறிய உதவியது.  அங்குள்ள