நான்கு இட்லி ஒரு உளுந்துவடை - பேக்கேஜ் உணவுக்கடைகளின் வணிக உத்திகள்
நான்கு இட்லி ஒரு உளுந்துவடை திருவண்ணாமலை செல்வது என்பது அங்கு குடிகொண்டுள்ள தெய்வத்தை பார்க்க அல்ல. அப்படி நிறையப் பேர் நினைப்பார்கள். அந்த தெய்வத்தை வழிபடும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. எனவே, அந்தப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. பதிலாக மதுரை காரியாப்பட்டியிலிருந்து புலம் பெயர்ந்து திருவண்ணாமலையில் வாழும் நண்பரை பார்க்க சென்றேன். பெரிதாக ஒன்றும் இருக்காது. அவருடன் பேசுவது, நான்கைந்து கடைகளில் இட்லி, புரோட்டா தின்பது, சில நூல்களை வாசிப்பது அவ்வளவுதான் திருவண்ணாமலைக்கான பயணம் என்பது. பெரிய வேறுபாடு ஏதும் இருக்காது. சிலசமயங்களில் ஆன்மிக நண்பர், வெளிநாட்டு பக்தர்களுக்கு புகைப்படம், வீடியோ எடுத்து தருவது என ஒப்புக்கொண்டு வேலை செய்வதுண்டு. அப்போது தன்னைப் பார்க்க வரும் என்னைப்போல ஆசாமிகளை தனது உதவியாளர் ஆக்கிக்கொண்டுவிடுவார். அப்புறம் என்ன ஏற முடியாத மலைகளில் பேண்டும் சட்டையுமாக தொங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். இப்படி ஒருமுறை கந்தாஸ்ரமம் செல்ல முயன்றபோது நேரிட்ட இடர்ப்பாடு சொல்ல முடியாத கஷ்டத்தை உடலுக்கும் மனதுக்கும் கொடுத்தது. முஸ்லீம்கள் தாங்கள் வாழும் நாடு எதுவாக இருந...