இடுகைகள்

மிலிட்டரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராணுவத்தினருக்கு காதி உடைகள்தான் இனி! - மேட் இன் இந்தியா முடிவு!

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் தாண்டி இப்போதுதான் யோசிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது பருத்தி மற்றும் கலப்பின இழைகளால் ராணுவ உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் பத்து லட்சம் பேருக்கு காதி வகை உடைகள் தயாரித்து வழங்கப்படவிருக்கின்றன. உள்துறை அமைச்சரின் சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொண்ட இந்தியாவிலுள்ள படைகளின் தலைமை காதி இயக்குநரை சந்தித்து பேசிவருகின்றனர். இதன்மூலம் காதியின் வளர்ச்சி  75 ஆயிரம் கோடியாக உயரும் என்கிறார் அதன் இயக்குநரான வினய் குமார் சக்சேனா. பருத்தியோடு கம்பளியையும் சேர்த்து உடைகளை நெய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இவற்றோடு உற்பத்தி துறைகளையும் அரசு பயன்படுத்திக்கொள்ள நினைத்தால் நாம் பிற நாடுளில் போர் தளவாடங்களைக் கூட நிறைய வாங்க வேண்டி இருக்காது. நன்றி - இடி