செக்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் உளவு அமைப்பு ஏஜெண்ட்! தி நவம்பர் மேன்
தி நவம்பர் மேன் ரஷ்யாவுக்கு உளவு அமைப்பிலுள்ளவர்களின் சதியால் அனுப்பப்பட்டு சிக்கிக்கொண்டு விடும் பெண்ணை மீட்க இன்னொரு ஏஜெண்ட் செல்கிறார் . ஆனால் அந்த திட்டம் சொதப்ப அவரின் உயிரும் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறது . அதிலிருந்து மீள அவரிடம் பயிற்சி பெற்ற இன்னொரு ஏஜெண்ட் உதவுகிறார் . இதோடு ரஷ்ய அதிபராக வாய்ப்புள்ளவரின் செக்ஸ் ஊழல்களை வெளியே கொண்டு வரும் திட்டமும் அமெரிக்காவின் உளவுப்படைக்கு உள்ளது . அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை பரபரவென வேகமாக சொல்லியிருக்கிறார்கள் . பியர்ஸ் பிராசனனின் உணர்ச்சிகளை உள்ளடக்கிய நடிப்புதான் படத்தின் பெரும் பலம் . யாருக்கும் தெரியாமல் திருமண வாழ்க்கையை மறைத்து வைத்திருப்பவரை ரஷ்யாவுக்கு உளவு அமைப்பு அனுப்பி வைக்கிறது . யாருக்காக நடாலியா என்ற அவரது மனைவியும் ஏஜெண்டுமானவரை மீட்கத்தான் . ஆனால் இதை மோப்பம் பிடித்த ரஷ்ய ஆட்கள பின்தொடர அமெரிக்க உளவு ஆட்களால் நடாலியா கொல்லப்படுகிறார் . கொதித்து எழும் பீட்டர் டெபேரோ ( பியர்ஸ் பிராசனன் ) தனது அமைப்பைச் சேர்ந்தவர்களின் உள்ளடி வேலைதான் இதற்கு காரணம் என நொடியில் தெரிந்துகொண