இடுகைகள்

பொதுவிநியோகமுறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணவீக்கத்தால் பசியில் படுக்கும் ஏழை குடும்பங்கள்!

படம்
  பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாக உள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வட இந்தியாவில் ரொட்டியுடன் சாப்பிட காய்கறிகள் இல்லாமல் உப்பை மட்டும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு வருகிறார்கள். இறைச்சி, பால், முட்டை என குழந்தைகளுக்குத் தேவையான எதையுமே அவர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழல் உள்ளது.  பணவீக்கம் காரணமாக பருப்பு, காய்றிகளை மூன்று வேளை உணவில் ஒரே முறை சேர்த்துக்கொள்ளும் படி நிலைமை மாறிவிட்டது. மும்பையைச் சேர்ந்தவர் அஃப்சனா. இவர் தனது வீட்டுக்கு அருகில் இருந்த குழந்தைகளுக்கு ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார். இவரது கணவர் துணிக்கடை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இருவரின் ஊதியமாக மாதம் 50 ஆயிரம் கிடைத்து வந்தது. அதை வைத்துத்தான் சேமிப்பையும் ஒரு லட்சம் வரையில் உயர்த்த முடிந்தது. இவர்களுக்கு மூன்று பெண்கள் உண்டு.  மூன்று குழந்தைகளுக்கும் முதலில் கறி, காய்கறி, பால், முட்டை என கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இடையில் குறுக்கிட்ட லாக்டௌன் காலம் இதுவரையிலான வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. அஃப்சனா சேர்த்து வைத்த சேமிப்புகள் காலியாகிவிட்டன. அடுத்து, அவரின் கணவருக்கு வேலை