இடுகைகள்

ட்ரெட்மில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலிவுவிலை ட்ரெட்மில் சாதனை! - ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த காணொலி

படம்
  முக்கியமான கண்டுபிடிப்பு விருதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் வழங்கத் தொடங்கியுள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் முக்கியமான உதாரணம். கவின்கேர். இந்த நிறுவனம், சின்னி கிருஷ்ணா என்ற தங்களது குடும்ப தொழில் முன்னோடியின் பெயரில் சுயதொழிலில் சாதிப்பவர்கள், தொழிலுக்கான ஐடியாக்களைக் கொண்டிருப்பவர்களை ஊக்குவித்து விருதுகளை வழங்குகிறார்கள்.இப்படி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன.   ஒன்று, சுயதொழில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பண உதவியும், பெரு நிறுவனத்தின் வலைப்பின்னல் வழியாக பொருட்களை விற்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. அடுத்து, பெரு நிறுவனம் பல்லாண்டுகளாக தான் செய்யும் தொழிலில் பணம் சம்பாதித்து இருக்கும். ஆனால் புதிய சிந்தனைகள், பொருட்கள் கிடைத்தால்தான் தொழில் நிறுவனங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். இதற்கு சுயதொழில் முனைவோர்களின் சிந்தனையும், பொருட்களும் நிறுவனத்திற்கு பேருதவியாக அமையும்.   பெரு நிறுவனங்களுக்கு இப்படி வறுமையான நிலையில் உள்ள சுயதொழில் முனைவோர்களுக்கு உதவுவதன் வழியாக அவர்களுக்கு சமூக அளவில் நல்ல பெயர் கிடைக்கிறது. அதாவது, பெரு நிறுவனத்திற்கு சிறந்த நன்மதிப்பு. பிராண்ட...