இடுகைகள்

ஷிபு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆழமான துயர் நிறைந்த ஷிபுவின் வாழ்க்கை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.1.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  உங்கள் உடல், மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன். மறைமலை அடிகள்  எழுதிய கடிதங்களைத் தரவிறக்கி வாசித்தேன். தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை. தனித்தமிழில் எழுதுவது, சைவத்தை பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார். தமிழக அரசு  மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன. இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன்.  இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன். அவர் தனது மனைவி, குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார். வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார். மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன். கிராமத்து சூப்பர் ஹீரோ கதை. நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான். அதாவது, நாடக கலைஞரான குரு சோமசுந்தரம்.  அம்மா, காதலி என இரண்டையும் சுற்றியுள்ளவர்கள் இழக்கிறார். வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார். அதில் ஏதும் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. நாயகனான ஜெய்சன் என்பவரின் வாழ்க்கை பெரிதாக ஈர்க்கவில்லை. ஷிப

தனது காதலியை பறித்த ஊரை வேட்டையாடத் துடிகும் ஷிபு! - மின்னல் முரளி - பசில் ஜோசப் - மலையாளம்

படம்
  மின்னல் முரளி பசில் ஜோசப் மலையாளம்  ஜெய்சனை மின்னல் முரளியாக கண்டுபிடித்துப் பேசும் காட்சி ஒரு கிராமம். அங்கு ஏற்படும் வரலாற்று முக்கியமான கிரக சூழ்நிலையில் மின்னல் தாக்குகிறது. அதன் பாதிப்பில் கிராமத்திலுள்ள இருவர் மாட்டுகின்றனர். இருவரும் அதனால் சக்தி பெறுகிறார்கள். அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே கதை.  ஜெய்சன், ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கிறார். அவருக்கு ஒரே லட்சியம், பாஸ்போர்ட் வாங்கி அமெரிக்காவுக்கு போவதுதான். தனியாக அமெரிக்காவுக்கு போய் என்ன செய்வது என, அந்த கிராமத்து  இன்ஸ்பெக்டர் பெண்ணையும் காதலிக்கிறார். அதாவது, ஜெய்சனுக்கு அந்தப் பெண் மீது காதல் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கான பொழுதுபோக்குக்கு ஜெய்சன் உதவுகிறான். ஆனால் அவள், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை  திருமணம் செய்துகொள்ள இசைகிறாள்.  உஷாவை சந்தித்துப் பேசும் நெகிழ்ச்சியான காட்சி... இதனால், ஜெய்சன் கோபம் கொள்ளுகிறான். அதேநேரம், அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்பவன், ஷிபு. இவனை கிராமத்தில் யாருக்கும் பிடிப்பதில்லை. இதற்கு காரணமான காட்சி, தாசனுடன் ஷிபு பேசும் காட்சி.  ஷிபுக்கு ஒரே லட்சியம், பசியைச் சமாளிப்பது