இடுகைகள்

எழுத்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

படம்
        pixabay             சிறந்த கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கருவிகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு… ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.   வரைபடங்கள் 6500 கி.பி இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது. பசை கி.பி 4000 இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டிய

போர்டிங் பாஸில் என்ன அச்சிடப்பட்டுள்ளது?

படம்
ஏர் இந்தியாவுக்கு செல்கிறீர்கள். உடனே கோயம்பேடு பஸ் போல ஏறி உட்கார்ந்துவிட முடியாது. போனவுடன் செக்யூரிட்டி செக்கிங் முடித்து, நீங்கள் ஏற வேண்டிய கேட் அருகே உள்ள கௌண்டரில் போர்ட்டிங் பாஸ் வாங்க வேண்டும். இதுதான் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதற்கான டிக்கெட்.  இதிலுள்ள ஆறு எழுத்துக்கள் பயணிகளின் விவரங்களைக் குறிக்கும். இந்த எழுத்துகள் ராண்டம் முறையில் உருவாக்கப்படுகின்றன. இதில் பயணிகளின் விவரம், தொடர்பு முகவரி ஆகியவை பதிவிடப்பட்டிருக்கும்.  இதில் உள்ள A, F என்ற எழுத்துகள்  முதல் வகுப்பு சீட்களைக் குறிக்க பயன்படுகின்றன. y  என்ற எழுத்து எகானமி வகுப்பை குறிக்கிறது.  க்யூ என்ற எழுத்து இருந்தால் தள்ளுபடி ரேட்டில்   எகானமி வகுப்பை புக் செய்திருக்கிறீர்கள் என்று காட்டிக்கொடுத்துவிடும். அதோடு பி என்ற எழுத்து அச்சிடப்பட்டிருந்தால் விமான இருக்கை அப்டேட் ஆகும் வாய்ப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எஸ்டிபிசி என்று அச்சிடப்பட்டிருந்தால் நீங்கள் செல்லும் வழியில் ஹோட்டலில் இலவசமாக தங்கிச்செல்ல முடியும் என்பதைக் குறிக்கும்.  நன்றி: மென்டல் ஃபிளாஸ்