உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

 

 

 

 

Soap, Horsetail, Salt, Blossom, Bloom, Wood, Towel
pixabay

 

 

 

 

 

 

சிறந்த கண்டுபிடிப்புகள்

அடிப்படைக் கருவிகள்

2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு…

ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.


 

வரைபடங்கள்

Globe Trotter, Traveller, Globe, Map, Journey, Planning

6500 கி.பி

இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது.

பசை

கி.பி 4000

இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டியூப் கம், கேமல் பிராண்டு பசை என நிறைய பிராண்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. இவையெல்லாம் செயற்கையான பசைகள். ஆனால் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையான பசையைத் தான் முதலில் பயன்படுத்தி வந்தனர். எகிப்தில் உள்ள இறந்தவர்களை புதைக்கும் இடத்தில் இயற்கையான பசையைப் பயன்படுத்தியுள்ளனர். அடுத்து தொன்மையான ரோமானியாவில் கப்பலில் உள்ள ஓட்டைகளை அடைக்க தேனீக்களின் தேனடைகளிலுள்ள மெழுகைப் பயன்படுத்தியது தெரியவத்துள்ளது. ஐரோப்பாவில் 6 ஆறாயிரம் ஆண்டுகள் பழையான உடைந்த பானைகளை பசையைப் பயன்படுத்தி ஒட்டியுள்ளனர்.

கண்ணாடி

கி.பி 4500

கண்ணாடி டம்ளர்கள் இல்லையென்றால் எப்படி சேட்டா கடைகள் உலகில் பிழைத்திருக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டு பரவலாக பயன்படுத்தப்பட்டன. ரோமானியர்கள் கண்ணாடி பொருட்களை சொகுசுப் பொருட்கள் போல் அல்லாமல் டம்ளர்கள், நகை என பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தினர். இன்று உலகை மாற்றிய கண்ணாடிப் பொருட்கள் இல்லாமல் வீடுகள் கட்டப்படுவதில்லை.  பல்வேறு வாகனங்களிலும் கண்ணாடிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

அடிப்படை விவசாயம்

இந்திய தலைநகரில் சோறுபோடும் விவசாயிகள் மீது கண்ணீர் குண்டுகள் வீசி எறியப்பட்டு வருகின்றன. இவர்கள் இப்படி விவசாய சமூகமாக உருவாகிய வளர்ந்தது பெரிய கதை. முன்னர் மக்கள் குழுவை மேம்படுத்தி அதனை வணிகப்பரப்பிற்கு கொண்டு சென்றது அடிப்படை விவசாய முறைகள்தான்  12 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் செழித்து வளர்ந்து இன்று நவீனமாக வளர்ந்துள்ளது.  கி.பி. 6 ஆயிரம் ஆண்டுகளில் மெசபடோனியாவில்  

சக்கரம்

Wooden Wheel, Wheel, Wagon Wheel, Wooden Wheels, Old

கி.பி. 5150

மனிதர்களின் வரலாற்றில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது மகத்தான ஒன்று. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது பல்வேறு தொழில்துறைகளை மிகப்பெரிய அளவில் மாறுதல்களுக்கு உட்படுத்தியது. தினசரி வாழ்க்கையை எளிதாக்கிய போக்குவரத்து என்பதோடு வணிகத்தையும் உலகளவில் பெரிதாக்கியதற்கு சக்கரத்திற்கு முக்கியப் பங்குண்டு.

படகு

கி.பி. 7500

உலகில் 70 சதவீதம் நீர் சூழ்ந்துள்ளது. அப்புறம் அதில் பயணிக்காமல் இருந்தால் எப்படி? கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே நீரில் போக்குவரத்து தொடங்கிவிட்டது. முதலில் தொடங்கிய போக்குவரத்து என்பது மரத்தை வெட்டி அப்படியே நீரில் மிதக்கவுட்டு அதில் பயணிப்பதுதான். பின்னர்தான் இதில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு படகுகள் செம்மையாக வடிவமைக்கப்பட்டன. சீனர்கள்தான் இதிலும் முன்னணி. அவர்கள் ஹான் அரசரின் காலத்திலேயே சிறப்பான படகுகளை மரத்தில் உருவாக்கி செலுத்தி வியாபாரம் செய்யத் தொடங்கினார். பிறகு காலியன் எனும் வணிகம் போர் என பல்வேறு செயல்பாடுகளுக்கும் ஒரே கப்பல் என செய்யத்தொடங்கினர். பிறகு நீராவி எஞ்சினில் செயல்படும் கப்பல்கள் உருவாகி உலகை  வலம் வந்தன. பல்வேறு நாடுகள் இதனால் மேற்கு நாடுகளால் காலனி நாடுகளாக மாற்றப்பட்டன. இந்தியாவும் தனக்கான மேய்ப்பர்களை இப்படியே பெற்றது. 



நெசவு Weaving Loom, Weaving, Traditional, Color, Fiber

கி.பி.  3500

இதனை மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று கூறமுடியாது. கி.பி நான்காம் நூற்றாண்டில் எகிப்தியர்கள் நெசவில் விற்பன்னர்களாக திகழ்ந்தனர். இந்த கண்டுபிடிப்புதான் விதவிதமான உடைகளை இன்றுவர் நாம் உருவாக்க காரணமாக உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா ஆகிய கண்டங்கள் பின்னாளில் நெசவில் கைதேர்ந்தவர்களாக மாறினர்.

எழுத்துகள்

போனடிக் வகை எழுத்துகள் மத்திய கிழக்கு நாடுகளில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை எழுத்துகள் முதலில் மனிதர்கள் தங்கள் எண்ணங்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்த முன்னர் எழுதப்பட்டது. இதுபோன்ற எழுதுவதை முதலில் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்ட செயல்முறையாக இருந்தது. இன்று உலகம் முழுவதும் பெறப்படும் போனடிக் வகை எழுத்துகளில் பல்வேறு தொடர்புகளை இருப்பது அறியப்பட்டுள்ளது.

 சோப்

கி.பி. 2800

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியாவில் கண்டறியப்பட்டது. சோப்பின் அடிப்படை வடிவம்தான் இது. கொழுப்பு, சாம்பல் என இரண்டில் கலவைதான் சோர். இவை ஒன்றாக கொதிக்கவைக்கப்பட்டு களிமண் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டது. பிரர் இம்முறை ஸ்பெயின் நாட்டில் சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை சோப்புகள் உருவாக்கப்பட்டன.  19ஆம் நூற்றாண்டில் இன்று நாம் புழங்கும் சோப்புகளின் வடிவத்திற்கு வந்துவிட்டோம்.  ஆலிவ் ஆயில், சல்சோலா தாவரத்தின் சாம்பலிலிருந்து சோப் இப்படி தயாரிக்கப்பட்டது.
 

future 

கருத்துகள்