சாத்தானின் மகன் வருகையை தடுக்கும் சாபம் பெற்ற நாயகனின் போராட்டம்! கான்ஸ்டான்டின் 2005
கான்ஸ்டான்டின்
டிசி காமிக்ஸின் படைப்பு
சிறுவயதில் பேய்களை பார்க்கும் அற்புத சக்தி கொண்டவன் கான்ஸ்டைன்டின். ஆனால் பேய்களை பார்ப்பதாக கூறினால் அவருக்கு என்ன நடக்கும்? அதேதான் அவரை உலகமே விநோதமாக பார்க்க, அவரை பல்வேறு சிகிச்சைகளுக்கு அனுப்புகிறார்கள். இதனால் உலக விதிகளுக்கு மாற்றாக தற்கொலைக்கு முயல்கிறார். ஆனால் அவரின் விதி முடியாததால் அவரை திரும்ப உலகிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
மா்ந்த்ரீக சக்தியால் கட்டப்பட்ட மனிதர்களை கான்ஸ்டான்டின் விடுவிக்கிறார். அவருக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம், மறு உலக வாழ்க்கையில் சொர்க்கம் செல்லவேண்டும். இதனால் பேய் பிடித்தவர்களுக்கு், சாத்தான்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். இதற்கு இடையில் அவரது நுரையீரலில் புற்றுநோய் வேகமாக வளர்ந்து வருகிறது.
உலகில் சாத்தானின் மகனின் மறுபிரவேசம் கடவுளின் மகனைக் கொன்ற கத்தியுடன் நடக்கிறது. அந்த மகன் பிறந்தால் உலகம் அத்தோடு முடிவுக்கு ்வந்துவிடும். அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்க, தெய்வீக சக்தி கொண்ட உடல் தேவை. இதற்காக இசபெல்லா என்ற பெண்ணின் சகோதரி ஏஞ்சலா என்ற பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இசபெல்லா, இந்த செய்தியை சொல்ல முயன்று தற்கொலை செய்துகொள்கிறார். இந்த விவகாரத்தை கான்ஸ்டாடின் ஆராய்ந்து எப்படி உண்மையைக் கண்டுபிடித்து சாத்தானை உலகிற்குள் வராமல் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.
படம் முழுக்க இறப்பு, பிறப்பு, பாவம், புண்ணியம் என்று பேசுவதால் ஏஞ்சலா கான்ஸ்டாடினுக்கு முத்தம் கொடுக்க நினைத்தாலும் கூட அவர் அதனை ஏற்பதில்லை. அந்தளவு படத்தை சீரியசாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் சண்டையும் கூட பூதங்களுடன் என்பதால் சண்டைக்காட்சிகளில் நாயகத்துவம் பெரிதாக கிடையாது. இறுதியில் கூட ஏஞ்சலாவை தன்னுடைய உயிரை ஏறத்தாழ தியாகம் செய்துதான் கான்ஸ்டாடின் ஏஞ்சலாவைக் காப்பாற்றுகிறார்.
இருள் உலகம், தாந்த்ரீகம் ஆகியவற்றைப் பற்றிய சுவாரசியமான படம்.
இருளை விரட்டுபவன்
கோமாளிமேடை டீம்
நன்றி
தமிழ்மினி
கருத்துகள்
கருத்துரையிடுக