இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் பங்கேற்காதது பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமே! - ஷியாம் சரண்

 

 

 

 

A former foreign secretary explains how Narendra Modi can ...

 

 

 


சியாம் சரண், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்


இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேர இன்னும் கூட கதவு திறந்திருக்கிறத. இதனை எப்படி பார்க்கிறீர்கள்.


இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணையவேண்டிய தன்மையைப் புரிந்துகொள்ள இந்த அம்சத்தை முக்கியமானதாக கருதலாம். இதனை வெறும் வணிக ஒப்பந்தம் என்று மட்டும் புரிந்துகொள்ளமுடியாது. முக்கியமான அரசியல் நிலைப்பாடு எனவும் கொள்ளலாம். இதில் இந்தியா இணையவில்லை என்பது சரியான பார்வை அரசுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. இதில் உள்ள தவறுகளை போதாமைகளை வெளியில் இருந்து கொண்டு கூறுவதை விட உள்ளே சென்று கூறுவது சரியாக இருக்கும். உலகளவில் நடைபெறும் வணிகத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வணிகம் முக்கியமான வணிக ஒப்பந்தங்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. நாம் இதுபோன்றவற்றில் அங்கம் வகிக்காதபோது, நமது சந்தையின் பங்கு விரிவடையாது. இது பிரச்னைக்குரியது.


இந்தியா ஜப்பான் மற்றும் ஆசியான் அமைப்பிலுள்ள பிற நாடுகளிடையே வியாபார ஒப்பந்தங்களை செய்துள்ளதே? அப்புறமென்ன?


பிராந்திய ஒப்பந்தம் என்பதோடு இதனை நீங்கள் ஒப்பிடமுடியாது. நாம் தாராள ஒப்பந்தம் நமக்கு சரியான பயன்களை தராது என்பதால் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது முரணாக தாராள ஒப்பந்தங்கள் இருப்பதால் பிராந்திய ஒப்பந்தத்தில் சேரவேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்கள்

 

'Wide Angle' Episode 1: Shyam Saran on How India Sees the ...

தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் வேலை செய்யவில்லை என்பதை எப்படி கூறுகிறீர்கள்?



2019-20 ஆம் ஆண்டு செய்யப்பட்ட பொருளாதார சர்வேயில் பொருளாதார ஆலோசகர் தாராளவாத ஒப்பந்தம் இந்தியாவுக்கு என்ன பயன்களை கொடுத்த து என பட்டியலிட்டுள்ளார். முழுக்க இவை நமக்கும் பயன்கொடுத்துள்ளது என்று கூறமுடியாது. நாம் என்ன நினைத்து தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் அந்த எண்ணம் முழுமையாக நிறைவேறவில்லை என்றுதான் கூறவேண்டும். ஜப்பானுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இந்திய மருத்துவத்துறை நிறுவனங்கள் குறைந்தவிலையில் சந்தையை அடையும்படி உள்ளது. ஆனால் இந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.


சீனா இந்த ஒப்பந்தத்தில் இருப்பதால்தான் இந்தியா ஒப்பந்தத்திலிருந்து விலகியிருக்கிறதா?


அதுவும் ஒரு முக்கியமான காரணம், ஆனால் சீனா முன்னர் ஏற்படுத்தியதைப் போல அரசியல்நிலைமைகள் இல்லை. ஆனால் இந்திய அரசு சீனாவை முன்னிட்டு மட்டுமே ஒப்பந்தத்தில் இணையாத போக்கை எடுத்துள்ளது என நினைக்கிறேன்.


கிழக்கு நாடுகள் மீதான நடவடிக்கை எப்படி உள்ளது?


இந்தியா இந்த விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. ஆர்சிஇபி ஒப்பந்த த்தில் சேரவில்லை. கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டிலும் இந்தியாவின் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. இதில் அமெரிக்காவும் இந்தியாவும் மட்டும்தான் பங்கேற்கவில்லை. இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சரை மட்டும் அனுப்பி வைத்தது. நாம் இந்த அமைப்பில் உறுப்பினராவது முக்கியம். ஆனால் இந்திய அரசு அதில் அக்கறை காட்டவில்லை. சீனா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இணைந்து டிரான்ஸ் பசிபிக் ஒப்பந்தத்தில் இணையாமல் இருப்பது முக்கியமானது. எதிர்காலத்தில் பைடன் அரசின் நிர்வாகம் மூலம் அமெரிக்காவுடன் சீனா புதிய வணிக ஒப்பந்தங்களை செய்துகொள்ள வாய்ப்பு உள்ளது.


தி இந்து


ஆனந்த் கிருஷ்ணன்


கருத்துகள்