யோகிபாபுவின் நடிப்பு மட்டுமே ஆறுதல்! நாங்க ரொம்ப பிஸி!
நாங்க ரொம்ப பிஸி
இதனை படம் என்றே சொல்லமுடியாது. டெலிபிலிம் போல எடுத்து வைத்திருக்கிறார்கள்.
நேர்மையான எஸ்ஐ, எப்படி குடும்ப பிரச்னைக்காக தனது கொள்கை தவறி மோசமான வழியில் செல்கிறார், தனது காதலியை கைப்பிடிக்க காதலன் எப்படி முறைதவறிய வழியில் பயணிக்கிறான், சிறிய திருட்டுகளை செய்து வரும் தில்லாலங்கடி திருடன் பெரிய கொள்ளையை செய்து செட்டிலாக நினைக்கிறான். இந்த மூவரும் ஒன்றாக இணைந்து கருப்பு பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். அதனை சரியாக செய்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்த காலத்தில் நடக்கும் கதை.
இந்த லைன் மட்டுமே சுவாரசியம். மற்றபடி படத்தின் மற்ற விஷயங்கள் எல்லாமே எப்போது முடியும் என்று என்ற எண்ணத்தை ஏற்படுத்துகி்ன்றன. படத்தின் ஒரே ஆறுதல், யோகி பாபுவும், சி. சத்யாவின் இசை மட்டும்தான். இவர்கள் மட்டும்தான் முடிந்தளவு தங்கள் உழைப்பை போட்டு கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் பிஸியாக ஏதாவது வேலையில் இருந்தால் இந்த படத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது.
படத்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்புவதில் பெருமை ஏதும் கிடையாது. அதனை அந்தளவு நேர்த்தியாக எடுப்பதுதான் முக்கியம். நாங்க ரொம்ப பிஸி கதையை சொல்லும் விதத்தில் சறுக்கிவிடுகிறது. எடுக்கப்பட்ட விதமும் சாதாரணமாக இருப்பதால், படம் பார்க்கிறோமா சீரியல் பார்க்கிறோமா என்று சந்தேகம் காட்சிக்கு காட்சி வருகிறது.
கொலைவெறி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக