மம்மியின் வகைகள்

 

 Pyramids, Painted, Egypt, Painting, Background, Image


மம்மியின் வகைகள்

கி.பி 5 ஆம் நூற்றாண்டு ம ம்மிகள் இவை. இவற்றை ஐஸ் ம ம்மிகள் என்று அழைக்கலாம். ஐஸ்பெட்டியில் வைத்து புதைக்கப்ட்ட ம ம்மிகள் இவை. மறு உலகில் பசிக்கும் என்பதால், ஆறு குதிரைகளையும் கூடவே புதைத்த கருணை உலகம் எதிர்பார்க்காத ஒன்று. புதைத்த உடல் பெண்மணியினுடையது. அதில் ஏராளமான டாட்டூக்கள் புராண கால விலங்குகளில் உருவத்தில் இருந்தன.

கானரி தீவு மம்மிகள்

இ்வை ஸ்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள். இவற்றின் காலம் 15ஆம் நூற்றாண்டு. இந்த ம ம்மிகளின் உடல் விலங்கு தோலினால் போர்த்தப்பட்டு மணலைப் போட்டு பதப்படுத்தி வைத்திருந்தனர்.


இன்கா மம்மிகள்

பெரு மற்றும் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள் இவை. கடவுளுக்காக தங்களை தியாகம் செ்யத குழந்தைகளின் உடல்கள்தான் ம ம்மிகள். 500 ஆண்டுகள் பழமையானவை. சாசபோயா என்று அழைக்கப்பட்ட மம்மிகள், வடக்கு பெருநாட்டின் பகுதியில் கிடைத்தன. இவை காட்டின் வறண்ட பகுதியில் இருந்தன.

காபுசின் காடகாம்ப்ஸ்

16ஆம் நூற்றாண்டுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மம்மிகள் இவை. உடலை எப்படி பதப்படுத்தவேண்டும் என்பதற்கு இவை சிறந்த உதாரணம். உடலிலுள்ள கெட்டுப்போகும் உறுப்புகளை அகற்றிவிட்டு உலர்த்தி வினிகரில் ஊறவைத்து உடலை பதப்படுத்தியிருக்கிறார்கள். இந்த செயல்முறையை எட்டு மாதங்கள் செய்து உடலை இன்றும் பார்க்கும்படி செய்திருப்பது ஆச்சரியம்தானே?


 

   
 

கருத்துகள்