மாநில அரசுகள்தான் ஆயுர்வேத மருத்துவத்தின் புனித தன்மையை கெடுத்துவிட்டன! - தியோபுஜாரி, இந்திய மருத்துவத்துறை

 

 

 

 

‘95% of ICUs are manned by Ayush docs, IMA’s opposition is ...

 

 

மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று கூறியுள்ளது. இதனை அலோபதி மருத்துவர்கள் எதிர்க்கி்ன்றனர். கூடுதலாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யமுடியுமா என மக்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இதுபற்றி மத்திய அரசின் இந்திய மருத்துவமுறைகள் கௌன்சில் தலைவர் வைத் ஜெயந்த் தியோபுஜாரி கூறுகிறார்.


அறுவை சிகிச்சை பற்றிய மத்தி அரசின் புதிய அறிவிப்பு எதற்கு?


1979ஆம் ஆண்டு ஆயுர்வேத படிப்பின் முதுகலைதொடர்பாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான தெளிவிற்காக கூறப்பட்டது. விதிமுறைகள் முன்னமே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருபவைதான்.

நாடெங்கும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை நடைமுறைப்படுபப்பட்டால் அதனை எப்படி கண்காணிப்பீர்கள்?


நாங்கள் கடுமையாக விதிகளை வகுத்துள்ளோம். கல்லூரியில் குறிப்பிட்ட தர அளவுகோல் கடைப்பிடிக்கப்படாதபோது நாங்கள் அவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. கடந்த ஆண்டு நாங்கள் இம்முறையில் 106 கல்லூரிகளுக்கு இளநிலைப்படிப்பிற்கான அனுமதியை வழங்கவில்லை. அறுவைசிகிச்சையாளர்கள், வலிநிவாரணி மருத்துவர்கள், பெண்கள் மருத்துவர்கள் என பலரும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு பயிற்சியை வழங்குவார்கள். இதனால் இக்கல்லூரிகளில் தினசரி அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன.


ஆயுர்வேத மருத்துவர்களுக்கு எதற்கு நவீன மருத்துவத்தின் விதிமுறைகள்? குழப்பம் வராதா?


பிஏஎம்எஸ் டிகிரி படிப்பை ஐந்தரை ஆண்டுகள் படித்தவர்கள் ஆயுர்வேத ஆச்சார்யா என்று அழைக்கப்படுவார்கள். எம்டி படிப்பவர்கள் ஆயுர்வேத வச்சஸ்பதி, எம்எஸ் படிப்பவர்கள் ஆயுர்வேதிக் தன்வந்திரி என கூறப்படுகிறார்கள். எம்டி, எம்எஸ் படிப்பில் மத்திய அரசின் விதிமுறைகள் உண்டு. இவர்களை டாக்டர் என்று அழைப்பதை விட வைத்தியர் என்று இந்திய முறையில் அழைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். எனது பெயரில் கூட நான் வைத்தியர் என்றுதான் அமைத்துக்கொண்டிருக்கிறேன். பிஹெச்டி முடித்த காரணத்தால் டாக்டர் என்று போட்டுக்கொள்ளவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. டாக்டர் என்று ஒருவர் தனது பெயரில் சேர்க்க விதிகளை அனுசரிக்கவேண்டும்.


ஆயுர்வேதம் படிப்பவர்கள் எதற்கு இடையீடாக அலோபதி படிப்பை கூடுதலாக படிக்கவேண்டும்ழ


மருத்துவம் மாநில அரசுகளின் பட்டியலில் வருகிறது. அவர்கள்தான் ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி முறைகளை படிக்கவேண்டும் என அனுமதி கொடுக்கிறார்கள். இல்லையெனில் அவர்களுக்கு டாக்டர் என கூறமுடியாது என்பதால் இப்படி செய்கிறார்கள். நவி மும்பையில் பாருங்கள் 365 ஆயுஷ் மருத்துவர்கள் கோவிட்-19 மருத்துவம் பார்க்கிறார்கள். இவர்களில் ஒருவர் கூட ஆங்கில மருத்துவம் படித்தவர்கள் அல்ல. இவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அனுமதியைக் கொடுத்தது? மாநில அரசுகள்தான் இப்படி அனுமதி கொடுத்து ஆயுர்வேத படிப்பின் புனிதத்தைக் கெடுக்கிறார்கள். காரணம் மாநில அரசுகளுக்கு தேவையான எண்ணிக்கையில் எம்பிபிஎஸ் மாணவர்கள் கிடைப்பதில்லை.


மத்திய அரசின் அறிவிப்பினால் அலோபதி மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறார்களே?


என்ஏபிஹெச் அமைப்பு அலோபதி மருத்துவமனைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆயுஷ் மருத்துவர்களை அங்கீகரிக்கவில்லை என்று கூறியிருக்கிறது. நாங்கள் இதனை வரவேற்கிறோம். ஆனால் மீதியுள்ள ஐசியூவில் 95 சதவீதம் ஆயுஷ் மருத்துவப் பயிற்சியாளர்கள்தான் இருக்கி்ன்றனர். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான். இவர்களுக்கு அலோபதி மருத்துவர்கள் காசுக்காக பல்வேறு வேலைகளை கற்றுக்கொடுக்கிறார்கள். பின்னர் இவர்கள் இந்திய மெடிக்கல் அசோசியேஷனில் அமர்ந்துகொண்டு ஆயுஷ் மருத்துவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என பேசுகிறார்கள். இது முட்டாள்தனம்.


ரீமா நாகராஜன்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்