புத்தகம் புதுசு! மனிதர்கள் சுயநலமானவர்கள், கெட்டவர்கள் அல்ல என்பதை வரலாறுரீதியாக சொல்லும் படம் !
புத்தகம் புதுசு
எக்ஸ்பிளெய்னிங் ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் லைஃப், லவ், ரிலேசன்ஷிப்
டாக்டர் கமில்லா பாங்
டாக்டர் கமில்லா தன்னுடைய இளம் வயது ஆட்டிச வாழ்க்கை, ஏடிஹெச்டி பிரச்னை ஆகியவற்றை விவரித்துள்ளார். நோய் பற்றிய பயம் எப்படி வாழ்க்கையை குலைக்கிறது என்பதை விளக்கி நம்பிக்கை தருகிறார்.
தி எண்ட் ஆப் எவ்ரிதிங்
டாக்டர் கேட்டி மாக்
விண்வெளி பற்றி நமக்கு தெரிந்த விஷயங்கள், தெரியாத விஷயங்கள் என பலவற்றையும் கேட்டி மாக் விளக்கியுள்ளார். ஸ்டிரிங் தியரி முதல் குவாண்டம் மெக்கானிசம் வரையில் பல்வேறு விஷயங்களை அழகாக எழுதியுள்ளார்.
வாயேஜ் த்ரூ ஸ்பேஸ்
கேட்டி பிளின்ட் அண்ட் கொர்னெலியாலி
விண்வெளியில் உள்ள பல்வேற விஷயங்களைப்பற்றி அழகான வண்ண படங்களுடன் விளக்கியுள்ள நூல் இது. விண்வெளியின் தொடக்கம் பற்றி பேசியுள்ள நூல் இது. சூரிய குடும்பம் கண்டறியப்பட்டது முதல் இருளில் குளிர்ச்சியில் உறைந்துள்ள கோள்கள் பற்றியும் கூறப்படுகிறது.
கே அனாடமி - எ கம்ப்ளீட் கைட் டு தி ஹியூமன் பாடி
டாக்டர் ஆடம் கே
திஸ் இஸ் கோயிங் டு ஹர்ட் என்ற நூலை எழுதியுள்ள ஆசிரியரின் நூல் இது. மனித உடலைப் பற்றிய முழுமையாக நூல் எனும்படியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் சொல்லி நம்மை வாசிக்க வைத்திருக்கிறார். கிறிஸ்துமஸிற்கு குழந்தைகளுக்கு சிறந்த பரிசாக இருக்கலாம்.
யூ ஆர் நாட் லிஸனிங் வாட் யூ ஆர் மிஸ்ஸிங் அண்ட் வொய் இட் மேட்டர்ஸ்
கேட் மர்பி
கேட் மர்பி, அறிவியலாளர்கள் முதல் கைதிகள் வரை பலரிடம் கதைகளைக் கேட்டு ்அந்த அனுபவத்தில் ஒருவரைக் கவனித்து விஷயங்களை உள்வாங்கிக் கொள்வது எப்படி என கூறுகிறார். ஒருவரின் தகவல்தொடர்பு குறைவாக இருந்தாலும் அதனை நிறைவாக எப்படி செய்வது என நூலில் விளக்கியுள்ளார்.
ஹியூமன்கைண்ட் எ ஹோப்ஃபுல் ஹிஸ்டரி
ரட்கர் பிரெக்மன்
மனிதர்கள் இயல்பானவர்களாக சுயநலமானவர்கள் அல்ல, கெட்டவர்கள் அல்ல என்பதற்கு ஏராளமான சான்றுகளை அறிவியல், இலக்கியம், வரலாறு ஆகியவற்றிலிருந்து எடுத்து காட்டியுள்ளார் ஆசிரியர்.
விஷ் வீ நோ - வாட் டு சே டாக்கிங் வித் சில்ரன் அபவுட்ன ரேஸ்
பிரக்யா அகர்வால்
இன்று உலகம் முழுக்க சாதி, வர்க்கம், நிறம், என பிரிவினைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் குழந்தைகள் இனம், இனவெறி பற்றி கேள்விகளை க் கேட்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு இதைப்பற்றி எப்படி பேசிப் புரிய வைப்பது என யோசிக்கிறீர்களா? அதற்கு இந்த நூல் உதவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக