வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை புரிந்துகொள்கிறார்களா?
pxhere |
பதில் சொல்லுங்க ப்ரோ?
வின்சென்ட் காபோ
வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை புரிந்துகொள்கிறார்களா?
மூன்றில் இருபங்கு பேர் புரிந்துகொள்வதாக கூறுகிறார்கள். இதனை தங்கள் பிள்ளைகளை புரிந்துகொள்வதாக கூறும் பெற்றோர்கள் அளவுடன் ஒப்பிட்டு சிலர் கிண்டல் செய்கின்றனர். நாய்கள் இயல்பாகவே பூனைகளை விட எஜமானவர்களின் உணர்ச்சிகளை புரிந்து நடந்துகொள்கின்றன. மேலும் அவை வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதை விட உடல்மொழியால் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடந்துகொள்வதே அதிகம். அவற்றின் குரைப்பு, உடல்மொழி ஆகியவற்றை வைத்தும் அது என்ன சொல்லுகிறது என எஜமானர்கள் கூறுகிறார்கள். இந்த வகையில் பூனையின் உடல்மொழியை 50 சதவீதம் புரிந்துகொள்வதாக அதன் உரிமையாளர்கள் கூறுகி்ன்றனர். வளர்ப்பு பிராணிகள் பேசமுடியாது என்றாலும் குரல் மூலம் அவை தகவல்தொடர்பு கொள்கின்றன.
பாக்டீரியா எங்கெங்கு இருக்கும்?
பாக்டீரியா இல்லாத இடமே கிடையாது. காற்று, நீர், உணவு, நமது தோல், குடல் என அனைத்து இடங்களிலும் உள்ளது. அதிக திறன் கொண்ட மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்கலாம். இதில் ஆண், பெண் வேறுபாடுகள் கிடையாது. சூழலும் உணவும் கிடைத்தால் நாம் என்ன செய்வோம்? அதேதான் இனப்பெருக்கம் அதிகரிக்கும். பாக்டீரியாக்கள் ஒரு செல்லை மட்டுமே கொண்டவை. பாக்டீரியா நம்மைத் தாக்கி நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.
தாவரங்கள், விலங்குகள் அழுகுவதற்கும், ஒயின் நொதிப்பதற்கும் பாக்டீரியா உதவுகிறது. பல் துலக்குவது, வயிற்றிலுள்ள அமிலங்கள், கை கழுவுவது ஆகியவை தீய பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துகிறது. பாக்டீரியாக்கள் காயங்கள், சிதைந்துபோன தோல், பூச்சிகளின் கடிவாய் ஆகியவற்றின் மூலம் பரவுகின்றன. பாக்டீரியாக்கள் எக்சோடாக்சின்கள் எனும் திரவத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் நமக்கு காலரா, டெட்டனஸ் ஆகிய பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. தொழுநோய், காய்ச்சல், பிளேக், காசநோய், ஆந்த்ராக்ஸ், லைம், டான்சிலிடிஸ் ஆகிய நோய்களையும் ஏற்படுத்துகிறது. அந்தோனி வான் லீயூவென்ஹாக், 1674ஆம் ஆண்டு பாக்டீரியாவை முதன்முதலாக கண்ணால் பார்த்தவர். உருப்பெரிதாக்கும் கண்ணாடி மூலம் பார்த்த பாக்டீரியா வடிவங்களை ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக