எண்களே இல்லாத கிரடிட் டெபிட் கார்டுகள்! - மோசடிகளிலிருந்து தப்பிக்க புது ஐடியா

 

 

 

 

Arm-Wrestling, Indian Wrestling, Competition, Fight

 

 


நிதிமோசடிகளை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்!



கிரடிட், டெபிட் கார்டுகளில் நடைபெறும் நிதி மோசடிகளைத் தடுக்க பல்வேறு நிறுவனங்கள் எண்களற்ற கார்டுகளை வெளியிட்டு வருகின்றன.


நாம் தற்போது கடைகளில் நேரடியாக பொருட்களை பணம் கொடுத்து வாங்குவதை கைவிட்டு டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறி வருகிறோ்ம். வங்கி வழியை விட கிரடிட், டெபிட் கார்டுகள் வழியாக நடைபெறும் பணப்பரிமாற்றம் பல்வேறு மோசடிகளுக்குள்ளாகி வருகிறது. இதில் ஒருவரின் பெயர், எண்கள், பாதுகாப்பு எண்கள் ஆகியவை உள்ளதால், அவற்றை முறைகேடாக பெறுபவர்கள் மோசடிக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுக்க எண்கள் இல்லாத அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அட்டையிலும் பின்(PIN) எண்ணை பயனர்கள், ஓட்டல்களில், மால்களில் பயன்படுத்தலாம். இந்த அட்டை, ஸ்மார்ட்போனிலுள்ள செயலியோடு இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் முறைகேடுகளுக்கான வாய்ப்பு குறைவு.


இந்தியாவில் இளைஞர்களுக்கான டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக ஃபேம்பே உரு்வாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஃபேம்கார்டு, மூலம் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் செலவுக்கான பணத்தை கொடுக்கலாம். வங்கி கணக்கு இல்லாமல் இதனைப் பயன்படுத்த முடியும். செயலியின் உதவியுடன் இதனை சாதாரண டெபிட் கார்டு போலவே பயன்படுத்தலாம். இந்த எண்களில்லாத கடன் அட்டைசேவையில் இந்த நிறுவனம் மட்டுமன்றி, ஏராளமான நிறுவனங்கள் நுழைந்துள்ளன.


தெற்காசியாவின் உணவு விநியோக நிறுவனமான கிராப், கிராப்பே என்ற கார்டை கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த கார்டைப் பயன்படுத்தி நிறுவனத்தின் உணவு விநியோக சேவையைப் பயன்படுத்தினால் பல்வேறு சலுகைகளை அளிக்கிறார்கள். மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து கிராப் நிறுவனம் இந்த கார்டை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கார்டுகள் தொலைந்துவிட்டால், நிதி சேவைகளை நிறுத்திவைக்கும் வசதி உண்டு.


அமெரிக்க டெக் நிறுவனமான ஆப்பிள், ஆப்பிள்பே சேவையின் ஒருபகுதியாக எண்களற்ற அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலுள்ள டச் ஐடி வசதி மூலம் கார்டைப் பாதுகாக்கலாம். ஆப்பிள் போன், வாட்ச் ஆகியவற்றுடன் இந்த கா்ர்டு இணைந்து செயல்படும். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பான்கோ ஸ்பான்டான்டர் என்ற வணிக வங்கி, அங்கு முதன்முதலில் எண்களற்ற கிரடிட் கார்டை வெளியிட்டுள்ளது. இதில் வாடிக்கையாளரின் பெயர், கார்டு காலாவதியாகும் காலம் மட்டுமே இருக்கும். இதில் கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்களை வாங்க கார்டைப் பயன்படுத்தலாம். இணையத்தில் வாங்க சூப்பர் வாலட் எனும் செயலியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நிதிமோசடிகள் 90 சதவீதம் குறைந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.


உலக நாடுகளில் எண்களற்ற கிரடிட், டெபிட் கார்டுகள் மெல்ல அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும்போது. நமது பணம் மோசடிக்குள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்கும் என நம்பலாம்.


தகவல்

Financial Express





கருத்துகள்