தூங்கி எழுந்தால் காதலன் பெயரில் இன்னொருவன் படுக்கையில் இருக்க, தவிக்கும் காதலி! - பியூட்டி இன்சைட் 2015 -

 

 

 

Asadal: [Movie Review] The Beauty Inside

 

 

 

பியூட்டி இன்சைட் 

Directed byBaik (Baek Jong-yul)
Produced byPark Tae-joon
Written byKim Sun-jung
Noh Kyung-hee
Based onThe Beauty Inside
by Drake Doremus
StarringHan Hyo-joo
Music byJo Yeong-wook
CinematographyKim Tae-gyeong   
The Beauty Inside – Korean movie review – Drama on a sofa

இன்றுள்ள மனிதர், நாளைக் காலையில் இருப்பதில்லை. அதாவது இன்று அவர் கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பொறுத்து நாளை வேறுமாதிரியாக உலகை எதிர்கொள்வார். கொரியாவில் வாழும் கிம் வூ ஜின், வித்தியாசமான பல்வேறு பர்னிச்சர்களை உருவாக்கும் திறன் கொண்டவர். இவருக்கு இரவில் படுத்து தூங்கி காலையில் எழுந்தால் முகம், உடல் என வேறு ஆளாக மாறிவிடுவார். மனம், புத்தி எல்லாமே சரியாக இயங்கும். ஆனால் உடலின் அனைத்து அளவுகளும் மாறிவிடும். கண்பார்வை, உடலில் அணியும் ஆடைகளின் அளவு, செருப்பின் அளவு. 

இப்படிப்பட்ட பாதிப்பு இருக்கும் இவர், அவரது அம்மாவுக்கே பாரமாகிறார். இதனால் தனியாக தான் தயாரிக்கும் நாற்காலி தொழிற்சாலையிலுள்ள அறையில் தங்கிக்கொள்கிறார். கிம் தினசரி தான் மாறும் புதிய மனிதரின் அடையாளத்துடன் கணினியில் தன் அனுபவத்தை பதிவு செய்து வைப்பது முக்கியம். வயதுக்கான பிரச்னைகளோடு அவர் எதையும் மறந்துவிடக்கூடாது அல்லவா?

Beauty Inside (Korean Movie - 2014) - 뷰티 인사이드 @ HanCinema ...

இந்த நிலையில் மாமா ஸ்டூடியோ என்ற பர்னிச்சர்களை விற்கும் கடைக்குச் செல்கிறார். அங்கு, ஈ சூ என்ற பெண்ணைப் பார்த்தவுடன் காதல் ஆசை பொங்குகிறது. இரண்டு நாட்கள் சென்று அவரைப் பார்த்து பல்வேறு கோணங்களில் ரசிப்பவர், நாற்காலி ஒன்றை வாங்கிக்கொண்டு அவரை டின்னருக்கு அழைக்கிறார். அப்போது இளமையான வடிவில் கிம் இருப்பதால் ஈ சூ ஆச்சரியமான புன்னகையோடு சரி என்கிறார்.  காதலை தக்க வைத்துக்கொள்ள கிம் தூங்காமல் இருக்கிறார். அப்போதுதானே உருவம் மாறாமல் இருக்கும். ஆனால் எத்தனை நாட்கள் இப்படி சமாளிக்க முடியும்.  காதலிக்கு உண்மையை எப்படி சொல்லாமல் மறைக்க முடியும்? எதிர்காலத்தில் நாள் முழுக்க ஒன்றாக இருக்கப் போகிறவளை எப்படி ஏமாற்றுவது? தனக்கு இருக்கும் வித்தியாசமான நோயை கிம் ஈ சூக்கு சொன்னானா இல்லையா என்பதுதான் படத்தின் முக்கியமான மையம். 

படத்தினை சப்டைட்டில்ஸ் துணையுடன் பார்க்காவிட்டால் எதுவும் புரியாது. கதை அப்படி ஆழமானது. 

 

The Beauty Inside - 뷰티 인사이드 - Watch Full Movie Free ...

ஒருவரின் அடையாளம் தொடர்ந்து மாறினால் அவனை எப்படி அடையாளம் காண்பது, அவனை மனைவியே அடையாளம் காண முடியாத அவலம் வேறு இருக்கிறது. ஒருவர் தனியாக வாழ முடியாது என்பதோடு காதலும் சேர்ந்து வருவது எவ்வளவு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள்.பேன்டசியான கற்பனை என்றாலும் படத்தை உணர்ச்சிகரமாகவும், இதுபோன்ற மனிதருக்கு காதல் வந்தால் சமூகத்தில் அவரின் காதலி, மனைவி எதிர்கொள்ள வேண்டிய கேள்வியையும் மன அழுத்தத்தையும் நன்றாக பதிவு செய்துள்ளார் இயக்குநர். 

கிம், காதலியை மணக்க கேட்கலாம் என நினைத்து அவளுக்கு மோதிரம் செய்துவிட்டு காரில் போகும்போது அதனைக் கேட்பதும், அதற்கு கண்ணீரோடு ஈ சூ நேரம் வேண்டும் என்று கேட்கும் காட்சியும் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஈசுவிடம் கிம்மின் அம்மா, உண்மையை பேசுவதும் அவரது கணவர் யார் என்பதை கூறுவதும், பின்னர் கிம் இளம்வயது பெண்ணாக மாறியபிறகு அவரிடம் கிம்மின் அம்மா, உன்னோடு உறவுகளை ஏற்படுத்திக்கொள்பவர்கள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று கூறுவதும், ஈ சூ தனது அக்காவிடம் எனக்கு கிம் என்னைக் கூட்டிச்சென்ற அனைத்து இடங்களும் நினைவிருக்கிறது. அவன் முகம் நினைவில்லை என்று கரைந்தழுவதும் முக்கியமான காட்சிகள். 

 

 

The Beauty Inside movie in 2019 | Beauty inside, Movie ...

காதல் என்பது வலிதானே? முகம் மாறினாலும் இதயம் மாறாதே என்று இறுதிக்காட்சி சொல்லிச்செல்கிறது. மழை பெய்யும் நாளில் மனதை ஈரமாக்கி நெகிழ்ச்சியாக்கும் படத்தை பாருங்கள். 


ஃபேன்டசி காதல் ஓவியம். 


கோமாளிமேடை



 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்