பெரும்பலூர் மாவட்டத்தில் பசுமையைப் பரப்பிய மனிதர்!
sample picture/ pixabay |
க்ரீன் கார்டியன்
பெரும்பலூர் மாவட்டத்திலுள்ள கீழப்புளியூர் கிராமத்தில் வி. கருப்பையா என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகன்றுகளை நட்டதுடன் அவற்றைப் பராமரித்து வருகிறார்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக கருப்பையா மரக்கன்றுகளை ஆற்றின் கரையோரமாக நட்டு பராமரித்து வருகிறார். ’’’நான் நூறு மரக்கன்றுகளை நடவில்லை. காரணம், அத்தனையையும் என் ஒருவனால் பராமரிக்க முடியாது. ஆண்டுக்கு நான்கு மரக்கன்றுகள் என நடுவேன். அதனை தினசரி சென்று பராமரித்து வருகிறேன்’எனும் கருப்பையான கோவில் ஒன்றினை நிர்வாகம் செய்து வருகிறார். இவர் பெரும்பாலும் வேம்பு, ஆலமரம் ஆகிய்வற்றை அதிகம் நடுகிறார். தினசரி காலை வேளை தொடங்குவது மரக்கன்றுகளை சென்று பார்த்தபிறகுதான்.
இவருக்கு மரக்கன்றுகளை நடுவதற்கான யோசனை சிறுவயதில் வந்திருக்கிறது. அப்போது சிலர் மரங்களை வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர். அவர்களை எப்படி தடுதது என்று தெரியாமல் தவித்திருக்கிறார். உடனே பெற்றோரிடம் இதனை சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் தனது வீட்டுக்கருகில் உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைக்கத்தொடங்கினார். இவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட, தற்போது தனியாக வசித்து வருகிறார். தள்ளாமையால் ஊரிலுள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் மரங்களைப் பற்றி எடுத்துக்கூறி பராமரிக்க கூறிவருகிறார்.
ஆச்சரியமாக, அவர்களும் கருப்பையாவின் பேச்சைக் கேட்டு மரங்களைப் பராமரிக்கத்தொடங்கியுள்ளனர். பெரம்பலூரைச் சேர்ந்த சூழலியலாளர் ரமேஷ் கே. இதுபற்றி பேசினார்.
கருப்பையாவின் செயல்பட்டால் கீழப்புளியூர் கிராமமே பசுமையாகியுள்ளது. இன்று அவரைப்போலவே மரங்களைக் காக்கும் பொறுப்பில் இளைஞர்களும் ஈடுபாடு காட்டிவருகின்றனர் என்றார்.
டைம்ஸ் ஆப் இந்தியா
எம்டி சாஜூ
கருத்துகள்
கருத்துரையிடுக