ஹோமியோபதி என்னென்ன நோய்களைத் தீர்க்கும் என்பதை விவரிக்கும் நூல்!

 

 

 

Homeopathy for Cold and Flu Season - Kimberton Whole Foods

 

ஹோமியோபதி


டாக்டர் விஜய் ஆனந்த்


கிழக்கு பதிப்பகம்




இந்திய அரசு மெல்ல அலோபதி மருத்துவமுறைக்கான ஊக்கத்தை குறைத்து இந்திய மருத்துவமுறைகளுக்கு திரும்பி வருகிறது. ஆயுர்வேத மருத்துவர்கள் இனி வரும் காலத்தில் அறுவை சிகிச்சைகளும் செய்யக்கூடும் எனும்படியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அலோபதிக்கு நிகரான பல்வேறு மருத்துவ முறைகளில் ஹோமியோபதியும் ஒன்று.


இந்த நூலில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை விவரித்து அதன் அறிகுறிகளை தெளிவுபடுத்தி அதற்கான ஹோமியோபதி மருந்துகளின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார் மருத்துவர்.


இதனால் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.


பிற மருத்துவமுறைகளை அறிந்துகொள்வது சில நோய்களைத் தீர்க்க உதவும் என நம்பலாம். இனி வரும் காலத்தில் ஒரே மருத்துவமுறையில் நோய்களுக்கான தீர்வுகளைத் தேடுவது கடினம். அனைத்து மருத்துவமுறைகளையும் இணைத்து அதற்கான கருவிகளையும் மருந்துகளையும் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.


ஹோமியோபதி மருத்துவம் பற்றிய நூல் இந்த நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.


இதில் நோய்களுக்கான மருந்துகள் குறிப்பிடப்பட்டாலும் உணவு பத்தியத்தைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. மருந்துகளை மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று சாப்பிட அறிவுறுத்தியுள்ளார் மருத்துவர் விஜய் ஆனந்த்.


ஹோமியோபதி மருத்துவமுறையை முழுமையாக இந்த நூல் மூலம் அறியமுடியாது. ஆனால் என்னென்ன நோய்களுக்கு அம்முறையில் மருத்துவம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இதில் ஒருவருக்கு திருப்தி இருந்தால் இம்முறையைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.


நூல் நோயைப் பற்றி குறிப்பிட்டாலும் அதனை நோயாளியிடம் எப்படி அடையாளம் கண்டார் என்பதைப் பற்றி எழுதியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். என்னதான் ஒருவர் நோய் அறிகுறிகளைப் பற்றி சொன்னாலும் மருத்துவர் உண்மையான பிரச்னையை அடையாளம் காண்பது சவாலாகவே இருக்கும். அந்த அனுபவங்களை நூல் தவறவிடுகிறது.


கோமாளிமேடை டீம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்