சாதனை படைக்கும் வள்ளல் பணக்காரர்கள் ! வியட்நாம், ஜப்பான், ஹாங்காங் நாட்டு வள்ளல்கள்
உலகம் புகழும் வள்ளல் பணக்காரர்கள்!
பாம் நாட் உவாங்
வின் குழுமம்
வியட்நாம்
பாம், 2006ஆம் ஆண்டு கைண்ட் ஹார்ட் பௌண்டேஷனை உருவாக்கினர். இந்த நிறுவனத்திற்கென 77 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் சிகிச்சை தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கும் மாணவர்களின் உதவித்தொகைக்கும் நிதியை வழங்கியுள்ளார். இந்த பௌண்டேஷன் வீடுகளைக் கட்டுவது, மருத்துவ மையங்களை அமைப்பது. நூலகங்களை உருவாக்குவது என வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கென பல்வேறு செயல்பாடுகளை பாம் செய்துள்ளார். இயற்கை பேரிடர்களுக்கு உதவுவதோடு, வின் குழுமம் கோவிட்-19 நிவாரணப்பணிகளுக்கும் 55 மில்லியன் டாலர்கள் அளவில் பல்வேறு கருவிகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். வின் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள பாம், வாகனங்கள் தயாரிப்பு, ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்கிறார்.
ததாசி யானாய்
ஃபாஸ்ட் ரீடெய்லிங்
ஜப்பான்
இவரது நிறுவனம் யுனிக்யூ என்ற ஜவுளி பிராண்டை நடத்தி வருகிறது. இதில் கிடைக்கும் வருமானத்தில் 102 மில்லியன் டாலர்களை நாட்டின் பல்க்கலைக்கழகத்திற்கு வழங்கி வருகிறார். புற்றுநோய் மருத்துவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் தசுகு ஹோன்சோ, சின்யா யமநாகா ஆகியோருக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்.. இந்த இரு பேராசிரியர்களும் செய்யும் ஆராய்ச்சி முழு உலகிற்கும் உதவக்கூடியது. என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் யானாய்.
கடந்த ஆண்டு நவம்பரில் வசிடா பல்கலைக்கழகத்திற்கு முரகாமி நூலகம் அமைக்க நிதியுதவி செய்துள்ளார். அங்கு படித்த முன்னாள் மாணவரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான முரகாமியை கௌரவிக்க யானாய் செய்த செயல்பாடு இது. இந்த நூலகத்திற்கு தேவையான நூல்களை முரகாமி வழங்கியுள்ளார்.
லி கா ஷிங்
சிகே அசெட் ஹோல்டிங்க்ஸ், சிகே ஹச்சிசன் ஹோல்டிங்க்ஸ்
ஹாங்காங்
ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவர் கடந்த ஆண்டு 129 மில்லியன் டாலர்களை உள்ளூர் வணிகம் சிறக்க வழங்கியுள்ளார். அந்நாட்டில் பெருந்தொற்றுக்கு முன்னரே உள்ளூர் வணிகம் மோசமான நிலையில் இருந்தது. அரசியல் சமச்சீரின்மைதான் அனைத்துக்கும் காரணம். லி கா ஷிங் பௌண்டேஷன் வழங்கிய பணம் 28 ஆயிரம் சிறு, மத்திய தொழில்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பயணம், சில்லறை விற்பனை ஆகிய துறைகள் இதனால் பயன்பெற்றுள்ளன. இதெல்லாம் இல்லாமல் கோவிட் -19 க்கான நிதியாக முக கவசங்கள், மருத்துவ உபகரணங்கள், ஏழைமக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
forbes
கருத்துகள்
கருத்துரையிடுக