காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்க முடியுமா? புதிய சட்டங்கள் என்னென்ன சொல்லுகின்றன?
காஷ்மீரில் மத்திய அரசு 12 விதிகளை மாற்றியுள்ளது. புதிதாக 14 திருத்தங்களை விதிகளில் கொண்டுவந்துள்ளது. இதெல்லாம் எதற்கு காஷ்மீரை விற்பதற்குத்தான். அதாவது அங்குள்ள நிலங்களை தொழிற்சாலைகளுக்கும்,விவசாயம் செய்யவேண்டி விரும்புபவர்களும் இந்த சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது உண்மையா?
காஷ்மீரில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகள் தவிர பிறர் வாங்க முடியாது. விவசாய நிலங்களை வாங்குபவர்கள் விவசாயம் செய்வதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசம் என்பதால் புதிய விதிகளை கவனித்துத்தான் ஒருவர் நிலங்களை வாங்க முடியும். ஆனால் இந்த விதியை அரசு தூக்கியெறிந்து தேவைப்படுபவர்களுக்கு நிலங்களை வழங்க முடியும். எது விவசாய நிலம், விவசாய நிலமல்லாதது எது என மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து அறிக்கை கொடுக்கலாம்.
நிலங்களை வாங்குவதற்கான வரம்பு ஏதாவது இருக்கிறதா?
முன்னர் ஒருவர் ஒன்பது ஹெக்டேர்களுக்கு அதிகமாக நிலங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூறப்பட்டது. 1950ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம்தான் இப்படி சொல்கிறது. மோடி அரசு இதனை மாற்றிவிட்டது. இதனால் நில உச்சவரம்பு ஏதும் இப்போது கிடையாது. காஷ்மீரில் உள்ள நிலங்களை வாங்குவதற்கு உதவும்படியாக விரைவில் வாரியம் ஒன்று அமையவிருக்கிறது.
தொழிற்சாலைகள் காஷ்மீரில் எளிதாக நிலங்களை வாங்கமுடியுமா?
இப்போதைக்கு பழைய முறைப்படிதான் நிலங்களை வாங்க முடியும். 2026ஆம் ஆண்டுதான் தொழிற்சாலைகளுக்கான நிலங்களை எளிதாக வாங்குவதற்கான நடைமுறைகள் எளிதாகும். 2016ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம இப்போது நடைமுறையில் உள்ளது. இதனால் நிலத்தை 90 ஆண்டு குத்தகைக்கு தொழில் நிறுவனங்கள் பெறலாம். யூனியன் அரசு இப்போது 2500 ஏக்கர் நிலங்களை தொழிற்சாலை மற்று்ம ஐடி பார்க்குகளுக்கு என அடையாளம் கண்டுள்ளது. இவை நகரங்களுக்கு அப்பால் உள்ள நிலங்களாகும். 2016 சட்டம் நிலங்களை தொழில் செய்வதற்கு வழங்கினாலும் வெளியில் உள்ள ஆட்களுக்கு இதில் எந்த அனுமதியும் கிடையாது. மாவட்ட ஆட்சியர்தான் இதில் தலையிட்டு ஏதாவது செய்யவேண்டும். தொழிற்சாலைகளுக்கு ஐந்து ஏக்கரும், ஐடி பார்க்குக்கு இரண்டு ஏக்கரும் அனுமதி உண்டு.
bussiness standard
கருத்துகள்
கருத்துரையிடுக