அசத்தும் வள்ளல் பணக்காரர்கள்! - கல்வி, மருத்துவச்சேவைக்காக பணத்தை செலவிடும் பணக்கார தொழிலதிபர்கள்
வள்ளல் பணக்காரர்கள்
ஹியூ டங் சூ
ஜிஎஸ் கால்டெக்ஸ் -தென்கொரியா
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹியூ ஜி என்ற இவரது நாற்பது வயது மகள் இறந்துபோனார். அவரது நினைவாக பௌண்டேஷன் ஒன்றைத் தொடங்கி கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறார். எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஹியூ டங் சூ, 1.9 மில்லியன் மதிப்பிலான பங்குகளை மகளின் பெயரில் அமைத்துள்ள பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் 33 மில்லியன் மதிப்பிலான தொகையை டாங்ஹெங் நலப்பணி பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். இந்த பௌண்டேஷன் இவரது குடும்பத்தாரால் நி்ர்வகிக்கப்படுகிறது. இதன் தலைவர் ஹியூ டங் சூதான். 1973இல் கால்டெக்ஸ் நிறுவனத்தில் ஹியூ இணைந்தார். இவரது குடும்ப நிறுவனமான ஜிஎஸ் குழுமத்தை கால்டெக்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. இவர் செஸ்ட் ஆப் கொரியா என்ற இனக்குழுவை நிர்வாகம் செய்துவருகிறார். இந்த அமைப்பு நாட்டிலேயே பெரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.
ராபர்ட் என்ஜி, பிலிப் என்ஜி
ராபர்ட் என்ஜி -சினோ குழுமம்
பிலிப் என்ஜி - ஈஸ்ட் கார்ப்பரேஷன்
இருவருமே சகோதரர்கள். என்ஜி டெங் பாங் பௌண்டேஷன் மூலம் பெருந்தொற்றுக்கு 7.4 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்துள்ளனர். இது இவர்களது குடும்ப நிறுவனம். உணவு, மருத்துவ சிகிச்சை, முக கவசங்கள் ஆகியவற்றை ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். பல ஆண்டுகளாக கல்வி, கலை இனக்குழு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 2 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளனர். சீனா, ஹாங்காக் ஆகிய நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு 3 ஆயிரம் உதவித்தொகைகளை வழங்கியுள்ளனர்.
பிரமோத் பாசின்
கிளிக்ஸ் கேபிடல்
இந்தியா
கடந்த ஜூனில் பாசின் லிவிங் மை பிராமிஸ் என்ற இந்திய
அமைப்பில் இணைந்தார். இந்த அமைப்பின் குறிக்கோள், தங்களது செல்வத்தில் 50 சதவீதம் சமூக நலப்பணிகளுக்கு வழங்குவது. பிலக்ஷா பல்கலைக்கழகத்திற்கு 2 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார். குர்கானிலுள்ள மெடியார் மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும் உதவியுள்ளார். சமூகநலத்திட்டங்களுக்கு இதுவரை 25 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார்.
லீ சுஃபு
ஜீலி ஆட்டோமொபைல் ஹோல்டிங்க்ஸ்
சீனா
லீ 28 மில்லியன் டாலர்களை கோவிட் -19 நிவாரணப்பணிக்கு கொடுத்துள்ளார். இதனை தன் ஸெஜியாங் லீ சுஃபு பௌண்டேஷன் மூலம் வழங்கியுள்ளார். இந்த அமைப்பை கல்வி, பேரிடர் விவகாரங்களுக்கான நிதியுதவியை வழங்கவே தொடங்கியுள்ளனர். இவரின் நிறுவனம் 14 நாடுகளுக்கு மருத்துவக்கருவிகளை தயாரித்து வழங்கியுள்ளது. ஸெஜியாங் பல்கலைக்கழகம் மூலம் 1, 46,000 டாலர்கள் நிதியுதவியை மருத்துவக் கல்விக்காக செலவிட்டுள்ளனர். 7, 30, 000 டாலர்கள் நிதியுதவியை யான்ஷான் பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு வழங்கியுள்ளனர்.
ஜான் காண்டெல், பாலின் காண்டெல்
காண்டெல் குழுமம்
ஆஸ்திரேலியா
1978ஆம் ஆண்டு முதல் காண்டெல் குழுமம், பல்வேறு நன்கொடை நடவடிக்கைகள் செய்துவருகிறது. 176 மில்லியன் டாலர்களை ஜான், பாலின் தம்பதியினர் நன்கொடையை வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ, கோவிட் -19 ஆகிய விவகாரங்களுகு 2.3 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 100 மில்லியன் டாலர்களை கலை, கல்வி, உடல்நலம், மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளனர். 2017இல் மெல்பர்ன் கேப்ரினி மருத்துவமனையைத் தொடங்கியுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக