ஸ்மார்ட் சாலைகளுக்கு வேறு என்ன ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்?

 

 

 

 Woman, Road, Running, Sports, Exercise, Legs, Active

 

ஸ்மார்ட் சாலைகளுக்கு வேறு என்ன ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்?


அமெரிக்காவைச் சேர்ந்த இன்டகிரேட்டட் ரோட்வேஸ் நிறுவனம், சாலைகளை டச் பேடு போல அமைக்க முயன்று வருகிறது. இதன்மூலம் ஸ்மார்ட் கார்களை எளிதாக சார்ஜ் செய்துகொள்ளமுடிவதோடு செல்லும் சாலை பற்றிய தகவல்கள், அருகிலுள்ள ஹோட்டல்கள், கடைகள் பற்றிய விவரங்களை அறியமுடியும். கான்சாஸிலுள்ள லெனெக்ஸா என்ற சாலைகை அரை கி.மீ தூரத்திற்கு இம்முறையில் அமைத்து சோதித்து வருகிறது இந்த நிறுவனம்.


அடுத்து, க்வார்ட்ஸ் கிரிஸ்டல்கள் மூலம் சாலைகளை அமைக்கும்போது கார்களின் அழுத்தம் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்பது மற்றொரு ஐடியா. இது புதிய ஐடியா கிடையாது. 1880இல் இந்த ஐடியாவை உருவாக்கிவிட்டனர். செயல்படுத்திப் பார்க்க இப்போதுதான் தயாராகி இருக்கின்றனர். லான்காஸ்டர் பல்கலைக்கழகம் இதற்கான ஆராய்ச்சி நிதி 4.5 மில்லியன் பவுண்டுகளை பெற்றுள்ளது.


ஐரோப்பிய நாடுகளில் பனி உறைவது பெரும் பிரச்னை. இதனை சரிசெய்ய சாலைகளுக்கு கீழே மெட்டல் ரிப்பன்களை அமைத்து பனி சாலையில் குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் அதனை உருக்குவது பிளான். இதனை இஸ்ரேலைச் சேர்ந்த சான் ஹைடெக் நிறுவனம் செய்துகாட்டியுள்ளது. கனடாவில் நடந்த சோதனைகள் வெற்றிகரமாகியுள்ளன.


சாலைகளில் இரவு நேரத்தில் செல்லும்போது இருபுறங்களிலும் உள்ள தடுப்புகளை பார்ப்பது கடினம். இதற்காவே போட்டோபோரசென்ட் வகை பெயின்டை 2014இல் டான் ரூஸ்கார்டே என்ற டச்சு நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதன்மூலம் சூரியனிடமிருந்து வெப்பத்தை பெற்று இந்த பெயின்ட் எட்டு மணிநேரத்திற்கு ஒளிரும்.




கருத்துகள்