புயல்களுக்குள் புகுந்து ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்! - பதில் சொல்லுங்க ப்ரோ?
பதில் சொல்லுங்க ப்ரோ?
வின்சென்ட் காபோ
புயல்களை பின்தொடர்ந்து எப்படி தகவல்களை சேகரிக்கிறார்கள்?
இதற்கென பயிற்றுவிக்கப்பட்ட வல்லுநர்கள் படை உண்டு. அந்த விமானத்தில் என்னென்ன சமாச்சாரங்கள் இருக்கும் என்று பார்த்துவிடுவோம்.
புரோப் பாராசூட்
இந்த பாராசூட் மெல்ல கீழே விழும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதுவே புயலின் பல்வேறு தகவல்களை சேகரிக்கிறது. ஆறு கி.மீ. தூரத்தை கடக்க ஏழு நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று கடலில் செலுத்தப்படுவது, மற்றவை காற்றின் அழுத்தம் ஈரப்பதம் வேகம், திசை ஆகியவற்றை கணக்கிட உதவுவது.
ஜிபிஎஸ் ஆன்டெனா இருக்கும் இதன் மூலம் ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களிலிருந்து தகவல்களை சேகரிக்கிறார்கள். புயலின் வேகம். திசை ஆகியவை இதில் தெரிய வருகிறது.
மைக்ரோபுரோச்சர்
இந்த சிறு கருவி மூலம் சென்சார்களில் உள்ள தகவல்களை பெற்று அதனை டிஜிட்டல் வடிவிலாக்க முடியும்.
ரேடியோ டிரான்ஸ்மிட்டர்
0.5 நொடிகளுக்கு ஒருமுறை தட்பவெப்பநிலை, ஈரப்பதம் அழுத்தம். புயலின் தகவல்கள் ஆகியவற்றை விமானத்தின் கணினிகளுக்கு அனுப்பி வைக்கும்.
புயலின் நடுப்பகுதிக்கு விமானம் சென்றபிறகுதான் பாராசூட்டை கீழே இறக்குவார்கள். தகவல்களைப் பெற்றபிறகு புயலை விமானம் கடக்கும். இதற்குப்பிறகுதான் ஆராய்ச்சியாளர்கள் அதனைப் பற்றிய முழுமையாக கருத்தை ஆராய்ந்து கூறுவார்கள்.
விமானத்தின் இடுப்பு பகுதியில் மழையை கணக்கிடும் ரேடார்கள் உண்டு. இவை 3டி வடிவில் முழு விமானத்தையும் சுற்றிக் கணக்கிட்டு மழையின் அடர்த்தியைக் கணக்கிடும்.
நான்கு டர்பைன் இஞ்சின்கள் இருக்கும். இவை கடினமான சூழலை சமாளித்து மீளும் திறனை விமானத்திற்கு தருகி்ன்றன. இரண்டு மட்டுமே பயன்படுத்தப்படும். சூழல் மோசமானால் மற்ற இரண்டு பயன்படுத்தப்பட்டு விமானம் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்.
நேவிகேட்டர்
இவர் புயலின் திசை, விமானம் செல்லவேண்டிய பாதையை கூறுவார்.
விமானத்தை இயக்குபவர் பைலட் என்றாலும் பைலட், கோபைலட் இருவருக்குமான வழிகாட்டலை அருகிலுள்ள வானிலை மைய வானிலையாளர் தனக்கு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு கூறுவார். இவர்தான் விமானத்தில் உள்ள ஆய்வாளர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக