ப்ரீலான்ஸ் டிடெக்டிவ் கொலைக்குற்றத்திற்கு தீர்வு கண்டுபிடிக்கிறார்! - ஆக்சிடென்டல் டிடெக்டிவ் 2015
Director:Kim Joung-hoon
Writer(s):Kim Jung-Hoon
The crux of the film is loosely inspired from Strangers on a Train
புத்தக கடை நடத்திவருகிறார் இளைஞர் ஒருவர். அவருக்கு மணமாகிவிட்டது. அவருடைய மனைவி வேலைக்கு சென்றபிறகு அந்த நகரில் நடந்த கொலைக்குற்றங்களை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காண்பது இளைஞருக்கு பிடித்தமான வேலை. அவர் காவல்துறையில் சேர முயன்று தோற்றுப்போனவர். எனவே, காவல்துறையில் சேராமலேயே நம்மால் குற்றங்களை தீர்க்கமுடியும் என காவல்நிலையத்திற்குள் போய் தனக்கு தெரிந்த விஷயங்களை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி அவமானப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் காவல்நிலையத்தில் உள்ள அவரது நண்பரே கொலை வழக்கு ஒன்றில் அநியாயமாக மாட்டிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற இளைஞர் நினைக்க, அவருக்கு இன்ஸ்பெக்டர் உதவிசெய்தால் அதுதான் படத்தின் மையமான புள்ளி
படம் முழுக்க கொரியப்படங்களுக்கு உண்டாக குடும்பம், பாசம், நேசம், நெகிழ்ச்சி , காமெடி என அனைத்தும் கொண்டதாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நாயகனுக்கான எந்த காட்சியும் கிடையாது. ஏன் சண்டையில் கூட அத்தனை அடிகளையும் வாங்கி மருத்துவமனையில் முனகிக்கொண்டே படுத்திருக்கிறார். இதில் கொஞ்சமேனும் லாஜிக்காக நினைத்து இன்ஸ்பெக்டருக்கு மரியாதை கொடுத்து படம் எடுத்திருக்கிறார்கள். அவரிடம்தான் துப்பாக்கி இருக்கிறது. அவரும் சண்டைபோட்டு வில்லன்களை வீழ்த்தி ப்ரீலான்ஸ் டிடெக்டிவ்வான தனது நண்பரைக் காப்பாற்றுகிறார்.
ஆங்கில சப்டைட்டிலுடன் படத்தை பார்ப்பது முக்கியமானது. மறந்துவிடாதீர்கள்.
சுவாரசியமான சாகசப்படம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக