மீண்டும் மவுசு பெறும் பிட்காயின்! - பல்வேறு நிறுவனங்கள் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்கின்றன!
மீண்டு வரும் பிட்காயின்.
பேபால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பிட்காயின்களை வாங்கவும் பிற கரன்சிகளை கையாளவும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தைப் போலவே 26 நிறுவனங்கள் பிட்காயின்களை வாங்க விற்க அனுமதியை வழங்கிவிட்டன.
பிட்காயின் கணக்கு வழக்கு இல்லாமல் புழங்கவில்லை. தேவைக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்கொயர் என்ற ஸ்டார்ட்அப்பை டிவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சி தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தங்களது நிதி வர்த்தகத்தில் பாதியை பிட்காயின் பக்கம் திருப்பியுள்ளது. பிட்காயின் மியூசுவல் பண்ட் கூட திட்டம் தயாராக உள்ளது. இதனை ராபின்ஹூ்ட், ரிவோல்ட் ஆகிய நிறுவனங்கள் செயல்படுத்த உள்ளனர். பெருந்தொற்று காலம் பிட்காயின் வணிகத்தை ஊக்குவிக்கிறது. உலகளவில் பங்குசந்தைகள் நிலையில்லாமல் சரிந்து வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் பிட்காயினை பாதுகாப்பான் முதலீடாக பார்க்கின்றனர்.
அடிக்கடி ஏற்ற இறக்கங்களை பிட்காயின் சந்தித்து மீண்டு வந்துள்ளது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவு பிட்காயின் மீது நம்பிக்கை குறைய முக்கியமான காரணமாகும்.
சைபர் அட்டாக் பாதிப்பும் இதில் உண்டு. ஜப்பானில் காயின் செக் என்ற நிறுவனத்தில் 500 மில்லியன் பிட்காயின் திருடுபோனதாக கூறப்பட்டது. இவர்களின் அலுவலகங்களில் போலீசார் ரெய்டு சென்றனர்.
இன்னொரு பாதிப்பு பிட்காயினை கருப்பு பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்துவர்கள் அதிகம்.
இந்தியா பிட்காயினை 2018ஆம் ஆண்டு தடைசெய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்கு பிறகு கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மெல்ல செயல்படத் தொடங்கி வருகின்றன. 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தடை சட்டம் பிட்காயின் விற்பனை, பெறுதல், உருவாக்குவது, விற்பது என அனைத்துமே தடை செய்யப்பட்டு உள்ளது.
டைம்ஸ் ஆப் ்இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக