மூளைச்சலவை எப்படி செய்யப்படுகிறது? பதில் சொல்லுங்க ப்ரோ?

 

 

brainwash - The Consumer Trap

பதில் சொல்லுங்க ப்ரோ?

Stop Trying to Brainwash Us!! - patriotmobile


வின்சென்ட் காபோ

மூளைச்சலவை எப்படி செய்யப்படுகிறது?

மூளைச்சலவை என்பதை கருத்துகளை சீர்திருத்துவது, கருத்துக்களை கட்டுப்படுத்துவது என்று கூறலாம். காஷ்மீரிலுள்ள இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு பிடித்து அவர்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டும் கருத்துகளை மனதில் திணித்து தீவிரவாதிகளாக மாற்றுகிறது. இதுபற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள். தன்னுடைய கருத்துக்கு எதிராக உள்ளவரை தன்னை நோக்கி, கருத்துகளை நோக்கி இசைவாக திருப்புவதுதான் மூளைச்சலவை. கூறப்படும் கருத்துகளைப் பொறுத்து விளைவுகள் நல்லதாக, அல்லதாக அமையும்.

கொரிய நாடுகளுக்கு இடையே போர் நடந்தபோது, பல நூறு அமெரிக்க வீரர்கள் இடதுசாரி கொரிய நாட்டு ராணுத்தினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடதுசாரி சிந்தனைகளால் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் திரும்ப அமெரிக்காவுக்கு திரும்ப வரவில்லை என்று கூறிவிட்டனர். பேட்டி ஹியரஸ்ட் என்ற பதிப்புத்துறை சார்ந்த பெண்மணி 1974ஆம் ஆண்டு இடதுசாரி விடுதலைப்படையால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். பின்னாளில் பேட்டி இடதுசாரி ராணுவத்துடன் இணைந்து வங்கியை கொள்ளையடிக்கவும் தயங்கவில்லை.

இதேபோல 2002இல் அமெரிக்காவின் வாஷிங்டனில் மால்வோ என்ற இளைஞரை மூளைச்சலவை செய்த ஜான் ஆலன் முகம்மது பத்து பேர்களை கொலை செய்வதற்காக ஏவினார். அமெரிக்கா, இஸ்லாம் மதம் என பேசி மால்வோவை தீவிரவாதியாக முகம்மது மாற்றினார். இவர்கள் நீதிமன்றத்தில் வாதாடும்போது கூட அவர்கள் இயல்புநிலையில் குற்றங்களை செய்யவில்லை என்று வாதாடப்படது.

குகிளக்ஸ் கிலான், யுனிஃபிகேஷன் சர்ச், ஹரே கிருஷ்ணா போன்ற அமைப்புகளை கூட உறுப்பினர்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்ற கருத்து விமர்சனமாக வைக்கப்படுவதுண்டு. எப்படி செய்கிறார்கள்? ஒருவரின் உணவு, தூக்கம், கழிவறைக்குச் செல்லும் பழக்கம் என அனைத்தையும் பிறரைச் சார்ந்தே செய்யமுடியும் என்ற நிலைக்கு கொண்டு வருவது முதல் படி. அடுத்து, அவரின் இயல்பான அடையாளத்தை உடைத்து அவருக்கென தனி அடையாளம், மதிப்பு, நம்பிக்கை கொண்ட விஷயங்களை உருவாக்கி சொல்லித்தர வேண்டும். இப்படித்தான் புதிய அடையாளம் மூலம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் உருவாக்கப்படுகின்றனர். இதுபற்றி 1962இல் தி மன்ச்சூரியன் கேண்டிடேட் என்ற திரைப்படம் வெளியானது. இதில் அரசியல் எதிரியை கொல்ல ஒருவனை மூளைச்சலவை செய்வார்கள்.
 

கருத்துகள்