பணம் கையாளப் பழகுவோம் - பட்ஜெட் திட்டம்
4
பணம் கையாளப் பழகுவோம்
பட்ஜெட் திட்டம்
இந்திய அரசு, ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) உருவாக்குகிறது. அதில்தான் நாட்டில் வருமானம், செலவு, பற்றாக்குறை ஆகிய விஷயங்கள் இடம்பெறும். அனைத்து மக்களுக்கும் என்னென்ன திட்டங்களுக்கு அரசு செலவு செய்கிறது என மக்களுக்கும் தெளிவாகும். தனிப்பட்ட முறையில் நாமும் வாரம் தோறும், மாதந்தோறும், ஆண்டுதோறும் செய்யும் செலவுகளையும், சேமிப்பையும் கண்டறிய பட்ஜெட் போடுவது அவசியம். தனிமனிதராக ஒருவர் தனது எதிர்கால வருமானத்தை யூகித்து பட்ஜெட் போடுவது அவசியம். அப்போதுதான் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து அவர் முன்னேற முடியும். ஒருவரின் நிதி நிர்வாகத்திறனை முன்னேற்றுவதற்கே பட்ஜெட் உருவாக்கப்படுகிறது.
சேமிப்பு
சேமிப்பு = வருமானம் - செலவு
வருமானத்திலிருந்து செலவைக் கழித்தால் கிடைப்பதுதான் ஒருவரின் சேமிப்பு.
செலவு = வருமானம் - சேமிப்பு
வருமானத்திலிருந்து சேமிப்பைக் கழிப்பது போக கிடைப்பதுதான் செலவு.
ஒருவர் தான் செய்யும் செலவுகளைத் திட்டமிட்டு, வருமானத்தில் ஒருபகுதியை சேமிப்து அவசியம்
பணத்தை எங்கு சேமிப்பது என்ற கேள்வி இப்போது உங்களுக்கு தோன்றியிருக்கலாம். அதற்கு மூன்று வழிகள் உள்ளன.
அவை சேப்டி(Safety), லிக்யூடிட்டி (Liquidity), ரிடர்ன் (Return)
முதலீடாக ஒருவர் செலுத்தும் பணம் எந்தளவு பாதுகாப்புடன் அவருக்கு கிடைக்கிறது என்பதுதான் முக்கியமானது. அரசின் பத்திரங்கள், வங்கியில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக நிதியை சேமிப்பது சேப்டி என்று கூறலாம்.
ஒருவர் வைத்திருக்கும் பணத்தை குறைந்தளவு இழப்புடன் எளிதில் விற்க முடிவதுதான் லிக்யூடிட்டி. இந்த வகையில் வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பது, ஈக்விட்டி பங்குகள், மியூசுவல் நிதி ஆகியவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.
ஒருவர் செய்யும் முதலீடு, அதில் கிடைக்கும் அதிகளவு லாபம் ஆகியவற்றை ரிடர்ன் என்று கூறலாம். ஈக்விட்டி பங்குகளில் ஒருவர் முதலீடு செய்வது சற்று ஆபத்தானது. இதனை இப்பிரிவுக்கு சான்றாக சொல்லலாம்.
நினைவில் கொள்ளுங்கள்!
நீங்கள் செய்யும் முதலீடுகள் பல்வேறு வகையாக இருப்பது முக்கியம். அனைத்து நிதியையும் பல்வேறு நிதிப்பிரிவில் சேமிப்பது அவசியம்.
சிறிது பணத்தை லிக்யூடிட்டி முறையில் வைத்திருந்தால்தான், அவசர காலங்களில் அதனை எடுத்து பயன்படுத்த முடியும்..
நிதியை முறைப்படுத்தாத அதிக ஆபத்துள்ள வணிகங்களில் முதலீடு செய்வதற்கு முன்னர் நன்கு யோசித்து செயல்படுங்கள்.
மதிப்பு வாய்ந்த செலவு
ஒருவர் தன்னிடமுள்ள சேமிப்பை பயன்படுத்தி சொத்துக்களை வாங்குவது, அதிலிருந்து வருமானம் பெறுவது ஆகியவற்றை மதிப்பு வாய்ந்த செலவு எனலாம். வீடுகளை வாங்குவது, பிள்ளைகளின் கல்விச்செலவு ஆகியவற்றை இவ்வகையில் சேர்க்கலாம்.
இப்பிரிவில் தனிப்பட்ட செலவுகளாக வாட்ச் வாங்குவது, கிரடிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கி செலவு செய்வது சேர்க்கப்படாது.
சொத்துக்களை வாங்குவது, கல்விக்கடன்களை வாங்குவது ஆகியவற்றுக்கு வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றை அணுகலாம். இவற்றில் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், நீங்கள் அதற்கான முறைப்படுத்தும் அமைப்பிடம் முறையிட முடியும். விதிமீறல்களையும் சரியானபடி தீர்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட தொகையை கொடுத்தால், அதைப்பெற்றுக்கொண்டு வங்கியில் கடன் பெற்றுக்கொடுக்கிறேன் என்று ஏமாற்றுக்காரர்கள் சிலர, மக்களை ஏமாற்றிவருகிறார்கள். வங்கியில் கடன்களை நேரடியாக அணுகி பெறுங்கள்..
கா.சி.வின்சென்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக