புயலுக்கு எப்படி பெயரை வைக்கிறார்கள்? புயலுக்கு வகைகள் ஏதேனும் உண்டா?
பதில் சொல்லுங்க ப்ரோ
வின்சென்ட் காபோ
புயலுக்கு எப்படி பெயரை வைக்கிறார்கள்?
ஒவ்வொரு புயலுக்கும் தனித்துவமான தகுதிகளை வைத்து அதன் பாதை, பலம், சேதம் ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றை யூகிக்கிறார்கள். அமெரிக்கா இதனை 1953 தொடங்கி அட்டவணைப்படுத்தி பெயர் வைத்து மக்களை எச்சரித்து வருகிறார்கள். உலக தட்பவெப்பநிலை அமைப்பு புயல்களுக்கான பெயர்களை வைக்கிறது.
புயல்களுக்கான பெயர்ப்பட்டியல் மொத்தம் ஆறு உள்ளது. இதில் க்யூ, யூ, எக்ஸ், ஒய், இசட் ஆகிய எழுத்துகள் மட்டும் இடம்பெறாது. மற்றபடி ஏ முதல் டபிள்யூ வரையிலான எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படையான நோக்கம் எளிதாக புயலில் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதுதான். இல்லையெனில் புயல் எச்சரிக்கையை அரசு மக்களுக்கு கூறுவது கடினமாகிவிடுமே.
ஒரு பருவகாலத்தில் அதிகளவு புயல்கள் வந்தால் கிரேக்க எழுத்துகளிலிருந்து புயலுக்கான பெயர்களை எடுக்கிறார்கள்.
புயலுக்கு வகைகள் ஏதேனும் உண்டா?
முதல் பிரிவு
119 153 மணிக்கு கி.மீ வேகம் வரை
இது மிகவும் வேகம் குறைந்த புயல் பிரிவு, செல்போன் கோபுரங்கள் சாய்வது, கட்டிடங்கள் இடிவது ஆகியவை நடக்கும். மின்சார கம்பங்களை சரித்துவிடும் அளவு வலிமை கொண்டது.
இரண்டாம் பிரிவு
நூற்று ஐம்பத்து நான்கு கி.மீ முதல் நூற்று எழுபத்து ஏழு கி.மீ வேகம் வரை
மின்சாரம், தொலைத்தொடர்பு என அனைத்துமே இந்த வேகத்தில் காணாமல் போய்விடும். உயிர்ப்பலியும் ஏற்படும்.
3வது பிரிவு
நூற்று எழுபத்து எட்டு முதல் இருநூற்று எட்டு கி.மீ வரை
உயிர்ப்பலிகள் அதிகம் ஏற்படுத்தும். வீடுகள், குடியிருப்புகள் இடியும். பாதிக்கப்பட்ட இடத்தில் மின்சாரம், நீர் கிடைக்காது. மரங்கள் வீழும்.
4வது பிரிவு
இருநூற்று ஒன்பது முதல் இருநூற்று ஐம்பத்து ஒன்று கி.மீ வேகம் வரை
வீட்டுக்கூரைகள், ஜன்னல்களை நொறுங்கும். பல மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரமும் நீரும் கிடைக்காது. பாதிப்பு கடுமையாக இருக்கும்.
5வது பிரிவு
இருநூற்று ஐம்பத்திரண்டு கி.மீக்கும் மேலே
இப்படி மீட்டருக்கு மேலே போவதால் மனிதர்களின் குடியிருப்புகள் முழுமையாக அழியும். இரும்பு கட்டிடங்களே ஆனாலும் தப்பிப்பது கடினம். வானம் முழுக்க தூசுக்களே நிரம்பியிருக்கும்.
ஹவ் இட் வொர்க்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக