வாழ்க்கையை கணக்கு சூத்திரங்களாக அணுகும் பேராசிரியர் வாழ்க்கையில் உணர்ச்சிகளை முக்கியமாக கருதும் மனைவி வந்தால்... பர்பெக்ட் அண்ட் கேஸூவல் 2020

 

 

 

 

Download Drama China Perfect and Casual Subtitle Indonesia ...

 

 


பர்பெக்ட் அண்ட் கேஸூவல்


சீன டிவி தொடர்


24 எபிசோடுகள்

Title: Perfect and Casual
Chinese Title: 完美先生和差不多小姐 / Wan Mei Xian Sheng He Cha Bu Duo Xiao Jie
Broadcast Website: MGTV

Broadcast Date: September 28, 2020

Air Time: Monday, Tuesday 20:00 (2 eps) on first week, Sunday-Monday subsequent weeks, 4 eps released early for VIP (See Viewing Calendar)
Genre: Romance
Language: Mandarin
Episodes: 24
Director: Li Shuang
Origin: China


உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் கணித சூத்திரங்களாக பார்க்கும் புள்ளியியல் பேராசிரியர் ஒருவரும், மனிதர்கள் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பும் கல்லூரி மாணவியும் ஒன்றாக இணைகிறார்கள். அதற்கு பேராசிரியரின் தாத்தாவுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முக்கியமான காரணம், புள்ளியல் துறையில் படிக்கும் யுன் ஷூ என்ற மாணவியை, பேராசிரியர் ஸாங் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துகொள்கிறார். அந்த உறவு ஒப்பந்தம் என்ற எல்லையைக் கடந்து காதல் சாலையில் பயணித்ததா, இல்லையா என்பதுதான் டிவி தொடரின் மையப்புள்ளி


பேராசிரியர் ஸாங்கைப் பொறுத்தவரை கணிதம்தான் எல்லாம். காபி போடுவது, சூப்பர் மார்க்கெட்டில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடி என அனைத்துமே கணித சூத்திரங்கள்தான். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கணிதமாகவும், கோட்பாடாகவும் பகுத்து குழம்பி தெளியும் ஆள் அவர். அவருக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் ஃபீல்ட்ஸ் பரிசு பெறுவது. அதுவும் 35 வயதிற்குள். ஆனால் இதற்கிடையே அவரது தாத்தா புற்றுநோய் பாதிப்பிற்கு ஆட்படுகிறார். பெற்றோரை விபத்தில் பறிகொடுத்துவிட்ட வசதியான குடும்பத்து பிள்ளை ஸாங்கிற்கு ஒரே வாழ்க்கை ஆதாரம், உறவு அவரது தாத்தாதான். தாத்தா, தனது பேரனுக்கு தானே திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார். அவன் வாழ்க்கை தனியாக கழிந்துவிடக்கூடாது என பயப்படுகிறார்

 

PERFECT AND CASUAL EPISODE 1-10 CHINESE DRAMA 2020 ...

இதற்காக ஸாங் வேறுவழியின்றி அவர் கல்லூரியில் படிக்கும் அவரது புள்ளியல் வகுப்பு மாணவி யுன் ஷூவை தயார்படுத்துகிறார். இதற்காக அவளுக்கு தங்குமிடத்தை கொடுக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். சில நாட்களுக்கு முன்னர்தான் யுன் ஷூ பேராசிரியர் ஸாங் தங்கியுள்ள வீட்டை விலைகொடுத்து வாங்குகிறாள். அதாவது அப்படி வாங்குவதற்காக பணம் கொடுத்து அவளது உறவினர் ஒருவரிடம் தனது தந்தையின் சேமிப்பு மொத்தத்தையும் இழக்கிறாள். இந்த உண்மையை அவளுக்கு புரிய வைத்து அது தனது வீடு என்பதை ஸாங் புரியவைக்கிறார்.


ஒப்பந்த அடிப்படையில் திருமணம் என்று ஸாங் சொன்னாலும் யுன் ஷூவைப் பொறுத்தவரையில் அது அவளது வாழ்க்கையில் பெரிய கனவு. பேராசிரியர் ஸாங்கை மெல்ல காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் தொடக்கத்தில் ஸாங்கிற்கு

யுன் ஷூ புத்திசாலித்தனமே இல்லாத பெண், தனக்கு எந்த பொருத்தமும் இல்லை என்று நினைக்கிறார். ஆனால் அவள் அவரின் தாத்தாவிடம் நம்பிக்கை பெறுவதோடு அவரை சிறப்பாக கவனித்துக்கொள்கிறாள். வாழ்க்கையின் நடைமுறை விஷயங்களை வேகமாக இயல்பாக செய்கிறாள். சூப்பர் மார்க்கெட்டில் துணி துவைக்கும் லிக்யூட் வாங்குவதற்கு பேராசிரியர் ஸாங் திணறுவார். யுன் ஷூ சிம்பிளாக ஐந்து நிமிடங்களில் இதனை செய்கிறாள்

 

ซีรี่ย์จีน Perfect and Casual (2020) อาจารย์หล่อบอกต่อด้วย ...

இருவரின் உலகமும் வேறுவேறு. இருவரும் ஓராண்டு ஒப்பந்த காலத்தில் எப்படி ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா? ஒப்பந்தம் என்பதை விட மனது முக்கியம் என பேராசிரியர் ஸாங் உணர்ந்தாரா, யுன் ஷூவின் நண்பர்களான யி, எல் நினோ ஆகியோரின் வாழைக்கை என்னவானது, புள்ளியியல் படித்தாலும் கார்ட்டூனிஸ்ட் ஆகும் கனவைக் கொண்ட யுன் ஷூ என்ன செய்தாள் என பல்வேறு விஷயங்களுக்கு டிவி தொடர் பதில் சொல்கிறது.


ஒருவரை நேசித்துக்கொண்டு வாழ அன்பு போதும். அவரின் ஐக்யூ அளவுகோல்கள் தேவையில்லை என்பதை வலுவாக சொல்லுகிறது டிவி தொடர்


டிவி தொடரில் எழுதப்பட்டுள்ள வசனங்களும் சூழலுக்கு ஏற்ப ரசிக்கும் வண்ணம் உள்ளன. காதல் பெருகி வழியும் தொடரில் வன்முறை, படுக்கை அறை காட்சிகள் குறைவு.


அன்பான உறவு


கோமாளிமேடை டீம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்