பெமினா பெண் சாதனையாளர்கள்!

 

 

 

Meet Femina's Fab 50 Women In This Special Issue | Femina.in

 

 

Sponsored - Pop Star Dhvani Bhanushali Adds Another ...

 

பெமினா பெண் சாதனையாளர்கள்

ராஜ்ஶ்ரீ பதி

ராஜ்ஶ்ரீ குழும நிறுவனங்களில் தலைவர் , இயக்குநர் இவர். இந்தியா டிசைன் பாரம் என்ற நிறுவனத்தையும் பதி தொடங்கியுள்ளார்.  மேலும் ஆயுர்வேதாவில் சொகுசுப் பொருட்களை வாங்குவதற்காக காமா ஆயுர்வேதா என்று நிறுவனத்தையும் இவர் தொடங்கியுள்ளார். ஹார்வர்டில் படித்து பட்டம் பெற்ற பதி, தனது தந்தை திடீரென காலமானதால் குடும்ப தொழிலுக்கு வந்தார். தனது தொழிலுக்கென தனிப்பார்வை கொண்டுள்ள தலைவர் இவர்.

ஸ்கூபா டைவிங், ஃபேஷன், கலை, ஆயுர்வேதா என பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர் பதி. இவரது தலைமையின் கீழ் ராஜ்ஶ்ரீகுழுமம் சர்க்கரை உற்பத்தியில் சிறப்பான சாதனைகளை படைத்து வருகிறது. பயணம், ஆரோக்கியம், உயிரியல், வடிவமைப்பு சார்ந்த கல்வி என பல்வேறு துறைகளை இக்குழுமம் கொண்டுள்ளது.

வந்தனா சிவா

இயற்கை மற்றும் மனித உரிமை வட்டாரங்களில் புகழ்பெற்ற நபராக வந்தனா உள்ளார். நவதான்யா எனும் இவரது அமைப்பு இயற்கை விவசாயத்திற்காக வழியை மக்களுக்கு காட்டுகிறது. பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கவும், தாராளமயமாக்கத்தின் பக்கவிளைவுகளை பிரசாரமும் செய்துவருகிறார்.

கனடாவின் ஒன்டாரியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் முனைவர் பட்டம் வென்றவர். டேராடூனில் அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வள ஆதாரங்களுக்கு என தனி அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். இயற்கை விவசாயம் சார்ந்து 20 நூல்களை இவர் எழுதியுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா

சிரித்துகொண்டே விளையாடும் பெண்கள் விளையாட்டையும் ரசிக்க வைத்த ஆக்ரோஷ ஆட்டக்காரி. அதிகவேக 50 ரன்களுக்கு இவர் எடுத்துக்கொண்டது 24 பந்துகளை மட்டுமே. அதேபோல ஒரு நாள் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டியதில் ஷிகார் தவானுக்கு அடுத்த இடம் அம்மணிக்குத்தான்.  அர்ஜூனா அவார்டை வென்றுள்ள கிரிக்கெட் வீராங்கனை இவர்.

டாக்டர் ஷ்ருதி நாயர்

தெற்காசியாவில் அசோகா எனும் சமூக தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டத்தின் தலைவர் நாயர்தான். அனைவரும் மாற்றங்களை ஏற்படுத்துவர்தான் எனும் திட்டத்தை தொடங்கி இளைஞர்களை சமூக மாற்றம் ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்புகளை உருவாக்க செய்தார்.

வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரம், பாலின சமத்துவம் ஆகியவற்றுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தொழில்முனைவோராக மாறும் பெண்களை ஊக்குவிக்கிறார்.

அனிதா டோங்க்ரே

ஏஎன்டி, குளோபல் தேசி, த அனிதா டோங்ரே ஆகிய துணி பிராண்டுகளை உருவாக்கியுள்ளார். பிங்க் சிட்டி என்ற கையில் செய்யும் ஆபரண பிராண்டை ஏற்படுத்தியுள்ளார். இவரது நிறுவனங்கள் மூலம் 400 கோடிக்கும் வருமானம் கிடைக்கிறது. வணிகநோக்கில் இவர் உருவாக்கிய உடை, நகை வடிவமைப்பு புரட்சிகரமானது..

அனிதா பிறந்த சிந்தி குடும்பத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதில்லை. ஆனால் அனிதா பல்வேறு சவால்களை சமாளித்து முன்னேறி வருகிறார். தொடக்கத்தில் தனது அக்காவுடன் சேர்ந்து ஆடை வடிவமைப்புத் தொடங்கி, இன்னு சிறப்பாக முன்னேறியுள்ளார்.


ரேவதி ராய்

பெண்களை டாக்சி ஓட்டுபவர்களாக யாராவது நினைத்து பார்க்க முடியுமா? அந்த முயற்சியை தொடங்கியவர் ரேவதி ராய்தான். இதனால் இந்திய அரசின் நிதி ஆயோக்கிடம் 2016, உலக வங்கியிடம் 2018ஆம் ஆண்டும் அங்கீகாரம் பெற்றவர் ரேவதி ராய். வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்த பெண்களுக்கு தங்கள் காலில் சுயமாக நிற்க கற்றுக்கொடுத்த பெண்மணி இவர்.

மும்பையில் ஹே தீதி எனும் டாக்சி சர்வீசை முதன்முதலாக பெண் ஓட்டுநர்களைக் கொண்டு தொடங்கினார். தனது வாழ்க்கையிலும் ஏராளமான சவால்களைக் கடந்துதான் இதனை சாதித்தார். இதற்காக 2017ஆம் ஆண்டு பெமினா ஜூரி விருதை வென்றுள்ளார். இவரைப்பற்றி ஹூ இஸ் ரேவதி ராய்? என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. அதனை ஜான் ஆப்ரஹாம் விரைவில் திரைப்படமாக உருவாக்கவிருக்கிறார்.


ஜூம்பா லஹிரி

எழுத்தாளர்

லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். சமகாலத்தில் முக்கியமான எழுத்தாளராக தன்னை நிரூபித்து புலிட்ஷர் பரிசை வென்றவர். ரோமுக்கு இடம்பெயர்ந்து இத்தாலியி மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறார். சினிமா என்றால் சத்யஜித்ரேவுக்கு என்ன முக்கியத்துவமோ அதுபோல இலக்கியத்தில் ஜூம்பாவுக்கு முக்கிய இடமுண்டு. தி இன்டர்பிரெட்டர் ஆப் மாலாடிஸ், தி நேம்சேக், தி குளோத்திங்க்ஸ் ஆப் புக்ஸ் ஆகியவை இவர் எழுதியவற்றில் முக்கியமானவை.


விருந்தா குரோவர்

2013ஆம்ஆண்டு பாலியல் வல்லுறவு தாக்குதல் சட்டத்திற்காக திருத்தம், 2012ஆம் ஆண்டு குழந்தைகளை பாலியல் ரீதியாக தாக்குவது, 2010ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான சட்டம், திட்டமிட்ட தாக்குதல் ஆகிய சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் ஏற்பட விருந்தா குரோவர் கடுமையாக உழைத்துள்ளார்.

டில்லியைச் சேர்ந்த விருந்தா குரோவர் ஏராளமான மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பங்கேற்றிருக்கிறார். 2018ஆம் ஆண்டு லண்டனில் சோஸ் பல்கலையில் பட்டம் பெற்றார். மனித உரிமை தொடர்பான விஷயங்களை அலசி ஆராய்ந்து கற்றவர். 2013ஆம் ஆண்டு உலகின் செல்வாக்கான ஆளுமைகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


டாக்டர் பூர்ணிமா தேவி பர்மன்

சூழலியலாளர்

2018ஆம்ஆண்டு நாரிசக்தி புரஸ்கார் எனும் புகழ்பெற்ற விருதை வாங்கியவர். ஹர்கிலா ஆர்மி எனும் பெண்கள் சூழல் பாதுகாப்பு படையை தொடங்கிய நடத்தி வருகிறார். சூழல் உயிரியலாளரான இவர் ஆரண்யாக் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அசாம் மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பறவைகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றைக் காக்க பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அசாமின் காம்ரூப் மாவட்டத்தில் தனது சூழலியல் பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்துள்ளார்.

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்