கொரோனா கற்றுத் தந்த பாடங்களை மறக்க கூடாது!

 

 

 

 

சின்மய் தும்பே

 

 

சின்மய் தும்பே

பொருளாதார பேராசிரியர்

ஐஐஎம் அகமதாபாத்


பெருந்தொற்று காலத்தில் நாம் கற்று்க்கொண்ட விஷயங்களை பின்பற்றுவதுதான் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை காக்கும் என்கிறீர்கள். இந்தியா அப்படி பாடங்களை கற்றுக்கொண்டது என நினைக்கிறீர்களா?


ஆம், இல்லை என இரண்டுவிதமாகவும் இதற்கு பதில் சொல்லலாம். நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னமே நடவடிக்கை எடுப்பது பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும். 1817 றற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் பெருந்தொற்று ஏற்பட்ட வரலாற்றை இந்தியா அம்னீசியா வந்த து போல மறந்துவிட்டது. இந்த பாதிப்பில் 40 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள். கடந்துபோன பெருந்தொற்றை கவனித்தால், தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவதை எளிதாக கணித்திருக்க முடியும். சீனாவில் 1911ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களை சிறப்பாக கையாண்டது. அக்காலகட்டத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் பனியில் சிக்கி இறந்தனர். நாம் நேரடியாக அதனை எடுத்துக்காட்டாக கொள்ளமுடியாவிட்டாலும் கூட அப்பாடங்களை மறக்க கூடாது.


கொரோனா முதலில் சீன வைரஸ் என்று கூறப்பட்டது.பின்னாளில் எப்படி பரவியது என்பது பற்றி ஆராய்ச்சி தெளிவாக கூறப்பட்டுவிட்டது. எப்படி இந்த ஆதாரமற்ற வத்ந்திகள் பரவுகின்றன?


வரலாற்றுரீதியாக பார்த்தால் தொற்றுநோய்கள் எங்கிருந்து பரவின என்பதற்கு நிலப்பரப்புரீதியான அரசியல் முக்கியமாக இருந்திருக்கிறது. பிறரை புகார் சொல்வதற்கு இனவெறியும் முக்கியமான காரணம். 2020இல் இந்திய சமூக வலைத்ததளங்களில் இந்தியாவில் இதுவரை பெருந்தொற்று நிகழவே இல்லை அனைத்தும் சீனாவினுடைய தவறு என்று செய்திகள் மீம்ஸ்கள் வெளிவந்தன. 1817ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட பெருந்தொற்றுக்காக இந்தியா உலகநாடுகளினால் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளானது. இதனை நான் என்னுடைய நூலில் எழுதியுள்ளேன். சீனாவில் நோய் பரவுவதற்கான முக்கிய காரணமாக கால்நடை சந்தையை சொல்லுகிறார்கள். உண்மையில் இப்படி சீனாவை கூறுவது அபத்தமானது. அப்படி கூறுவதை ஏற்றால், நாம் இந்தியாவின் சார்பாக இந்தியா காலரா, ஸ்பேனிஷ் ப்ளூ என்பதைக் கூட ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.


உங்கள் நூலில் பெருந்தொற்று காரணமாக முன்னாள் அதிபர் டிரம்பின் தாத்தா பிரெடிரிக் டிரம்ப் இறந்துபோனதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இன்று பெருந்தொற்று காரணமாக டிரம்ப் தோல்வியுற்றதை மறைமுகமாக நினைவுபடுத்துகிறீர்களா?


பிரடெரிக் டிரம்ப் ஜெர்மன் அமெரிக்க வணிகர். மே 1918ஆம் ஆண்டு அவர் இறந்து போனார். அப்போது தொடங்கிய இன்புளூயன்சா பெருந்தொற்று எப்படி மனிதர்களின் ஆயுளை முடித்து வைத்தது என்றால், அரசு அதனைச் சமாளிக்க முன்னேற்பாடுகளை செய்யாததால்தான். ஒருவகையில் நூலில் நான் எழுதியதை நீங்கள் சரியாக புரிந்துகொண்டீர்கள் என்று கூட சொல்ல்லலாம். முன்னதில் வாழ்க்கை என்றால் பின்னதில் அரசியல் எனலாம்.



தொழிலாளர்களை எப்படி நிர்வாகம் செய்வீர்கள்?


தொழிலாளர்களை பொதுமுடக்கம் அறிவித்தபின் அவர்களின் ஊர்களுக்கு கொண்டுசென்று சேர்ப்பது கடினம். சீனாவில் 1917இல் இப்படித்தான் நடந்த்து. இந்தியா அதனை ஷிராமிக் ரயில்கள் மூலம் செய்தது. இதனால் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது கடினம். தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வது அரசின் கடமை. இதனை அரசு தாமதமாக செய்தது. இதற்கு தாமதமானதால் தொழிலாளர்கள் பல்வேறு கேம்ப்களை உருவாக்கி தங்கியிருந்தனர். இதனால் நோய்த்தொற்று பரவும் வேகம் கூடியது. 1896-97ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் நமது பாணியை பயன்படுத்தினர். அவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பது முன்னமே தெரிந்துவிட்டது. எனவே, அப்படியே ரயிலை இயக்கினர். இடம்பெயர் தொழிலாளர்களுக்கான கொள்கைகளை அரசு உருவாக்குவது முக்கியம்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்