விமானத்தில் செல்லும்போது அழுகை வருவது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ? - வின்சென்ட் காபோ

 

 

People, Man, Guy, Cry, Tears, Groom
pixabay

 

 

 

பதில் சொல்லுங்க ப்ரோ?


வின்சென்ட் காபோ


காய்ச்சலில் இருக்கும்போது சாப்பிடாமல் இருப்பதும், சளிப்பிடித்திருக்கும்போது சாப்பிடுவதும் சரியா?


சளி பிடித்திருக்கும்போது சாப்பிடுவது பொதுவானதுதான். நோய்த்தொற்றை எதிர்கொள்ள உடலில் பலம் தேவை. எனவே நோயுற்றிருக்கும்போது ஏதாவது உணவை சாப்பிடுவது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும்போது, சூப் தயாரித்து குடிப்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 2002இல் செய்த ஆராய்ச்சிப்படி ஆராய்சியாளர்கள் சளிப்பிடித்திருக்கும்போது உணவை முறையாக எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது என்று கூறினர். இதில் கலந்துகொண்டவர்கள் குறைவானர்கள்தான். மேலும் பசித்தால் சாப்பிடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிடுவது சரியானதல்ல. கிரேக்கத்தில் காய்ச்சல் அடிக்கும்போது எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது புழக்கத்தில் இருந்து வந்த து. இது காய்ச்சலை குணப்படுத்தும் என்று கூறமுடியாது.


உணவு எடுத்துக்கொள்வதை விட முழுமையாக ஒய்வெடுப்பது முக்கியமானது.


விமானத்தில் படங்களை பார்க்கும்போது கண்ணீர் வருவது ஏன்?


தனியாக இருப்பதால் ஏற்படும் பிரச்னை இது. சமூக வலைத்தளத்தில் கூட இதுபோன்ற சிக்கல்களை பலரும் கூறியிருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக விமானம் குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும்போது அங்கு ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு தட்டுப்பாடாகி, மனதில் எதிர்மறை எண்ணங்கள் கூடும். ஹைபோசியா எனும் இந்நிலை ஏற்படுவதால் கண்ணீர் பொங்கிப் பெருக வாய்ப்பு உள்ளது. உளவியில்ரீதியாக பிரியமானவர்களை விட்டு பிரிந்து விமானத்தில் செல்வதால் அந்தநேரம் முழுக்க மன அழுத்தம் சார்ந்த சிக்கல்கள் பயணிகளுக்கு ஏற்படலாம். எனவே அவர்கள் படம் பார்த்தாலும் கூட அழுகை பொங்கி வர வாய்ப்புள்ளது.


ரெக்கார்டுகளை பாடவைக்கும்போது வேகத்தை அதிகரித்தால் அதன் பிட்ச் மாறுவது ஏன்?


ரெக்கார்டுகளில் பாடல்கள் கேட்பது அதில் காற்று எப்படி அதிர்வடைகிறது என்பதைப் பொறுத்ததுதான். இருமடங்கு வேகத்தில் அதனை சுழல்செய்யும்போது அதன் ஒலிவேகம் மாறுபடும். இதனால் அதிக ஒலியுடன் பாடல் ஒலிக்கிறது. இப்படி பாடல்களை ஒலிக்கப்படுவதால் இசைக்கருவிகள் இசைக்கப்படும்போது அரைப்பாதி வேகத்தில் பதிவுசெய்யப்படுகிறது. இவற்றை சரியாக வேகத்தில் இயக்கு்ம்போது, இசைக்கருவிகளின் ஒலி அதிகமாக கேட்கும்.


குழாயில் நீர்வருவதைப் பார்த்தால் சிறுநீர் கழிக்கத் தோன்றுவது உண்மையா?


பல நூற்றாண்டுகளாக குழந்தைகளை படுக்கச்செல்லும்போது பாத்ரூம் சென்றுவிட்டு படுக்க சொல்லுவார்கள். அவர்களுக்கு சிறுநீர் கழிக்க செல்ல வைக்க, குழாயைத் திறந்துவிடுவது முக்கியம். அது உளவியல்ரீதியாக சிறுநீர் கழிக்க உதவுகிறது. மருத்துவமனையில் சிறுநீர் கழிப்பதற்கான சோதனைகளிலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இப்படி குழாயைத் திறந்து வைப்பது ஒருவகையில் நோயாளிகளை பதற்றத்திலிருந்து நெகிழ்வாக்குகிறது. இதனை பாராசிம்பதெட்டிக் நெர்வஸ் சிஸ்டம் என்று கூறலாம். ஒருவகையில் குழாயிலிருந்து கீழே விழும் நீரின் ஒலி நோயாளிகளுக்கு நிம்மதியைத் தருகிறது.


நீரில் நனைந்துவிட்ட நாயின் உடலிலிருந்து வரும் மணம் எப்படி உருவாகிறது?


மழைக்காலத்தில் செல்லப்பிராணிகள் மழையில் நனைந்துகொண்டு வீட்டுக்குள் ஓடிவரும் வாய்ப்பு அதிகம். அவற்றின் முடி, ஒருவித நெடியைக் கொண்டிருக்கும். இதற்கு அந்த முடியிலுள்ள பாக்டீரியா, நுண்கிருமிகள்தான் காரணம். பொதுவாக ஈரக்கான்று அதிகளவில் வாசனைகளை கொண்டுவரும் மூலக்கூறுகளை கொண்டுள்ளது. இதனால்தான் செல்லப்பிராணிகள் அருகில் வரும்போது அதன் உடல்நெடி தாங்கமுடியாமல் எட்டி உதைக்கலாம் என்று தோன்றுகிறது.


சிலந்திகள் தம் கால்களை இழந்தாலும் கூட ரத்த இழப்பு ஏற்படுவதில்லை எப்படி?


அதற்கு காரணம் அதன் கால்களிலுள்ள தசை அமைப்புதான். இதுதான் அவை கால்களை இழந்ததும் தசைகளை இயக்கி, ரத்த இழப்பைக் குறைத்துக்கொள்கிறது. பின்னர் இழந்த கால்கள் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன.


bbc


கருத்துகள்