இடுகைகள்

கிராமர்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!

படம்
  இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.  வாட்ஸ்அப் இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.  பேபால் பணத்தை இணையம் வழியாக கட்டும் நிறு