இடுகைகள்

சூழல் - வெப்பமயமாதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உருகுதே ஐஸ்கட்டி....

படம்
தி நியூயார்க் டைம்ஸ் உருகுதே உருகுதே ஐஸ். கடந்த எண்பது ஆண்டுகளாக இல்லாத அளவு இமாலயத்தில் பெருமளவு பனிக்கட்டிகள் உருகியுள்ளன. ஜப்பானிலிருந்து விஸ்கான்சின் வரை ஏரிகள், நீர்நிலைகள் திடீரென உறைபனியால் உறைந்துவிடுவது நடைபெற்றுவருகிறது. வடதுருவத்தில் உள்ள 1.4 மில்லியன் ஏரிகளில் உள்ள பனிக்கட்டி உருகத்தொடங்கியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் பதற்றத்துடன் பார்த்து வருகின்றனர். பனிக்கட்டிகள் இப்படி உருகுவது அடுத்து வரும் கோடைக்காலத்தை மேலும் கடுமையாக்கும். ஏனெனில் சாதாரணமாக வெப்பத்திற்கு வறளும் நீர்நிலை, நீர்ப்பாசிகளை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது.

மூளையைத் தின்னும் கிரேட் டிட்ஸ் பறவை: ஏன் இந்த கொலைவெறி?

படம்
வன்முறைக்குப் பழகும் பறவைகள்!  பருவச்சூழல் மாற்றங்கள், பறவைகளின் குணநலன்களின் மாற்றத்தை ஏற்படுத்துவதாக உயிரியல் ஆய்விதழ் தகவல் தெரிவித்துள்ளது.  பருவச்சூழல் மாற்றங்களால் கடல்நீர் மட்டம் உயர்வது, குடிநீர் தட்டுப்பாடு, வெப்பம் உயர்வது ஆகியவை மனிதர்களை மட்டுமல்ல பறவைகளையும் பாதிக்கிறது. இதனை கரன்ட் பயாலஜி என்ற ஆய்விதழின் பத்தாண்டு கால ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச்சுழற்சி மாற்றம்! ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் அதிகம்  காணப்படும் பறவை கிரேட் டிட்ஸ்(Parus major).  வசந்தகாலத்தில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் பறவை, கிரேட் டிட்ஸ். இதைப்போன்றே, அங்கு வாழும் ஃபிளைகேட்சர் எனும் பறவை ஆப்பிரிக்காவுக்கு இனப்பெருக்கத்திற்காக இடம்பெயர்கிறது.  தற்போது பருவநிலை மாறுதல்களால் இருபறவைகளுக்கான உணவு ஆதாரங்கள் தட்டுப்பாடாகி வருகின்றன. இச்சூழ்நிலை இரு பறவை இனங்களுக்குமிடையே யார் பிழைத்திருப்பது என்ற பெரும் போரை ஏற்படுத்திவிட்டது. வெப்பமயமாதலால் பறவைகளின் இனப்பெருக்க காலம், கருவுறும் கால மாற்றம் ஆகியவை, அதன் வாழ்க்கை சுழற்சியிலும் திகைப்பூட்டும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள