இடுகைகள்

பன்னாட்டு நிறுவனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவனங்களின் இயக்குநர்களாக இந்தியர்கள் நியமிக்கப்பட என்ன காரணம்?

படம்
  pixabay சாதிக்கும் இந்திய இயக்குநர்கள்! அண்மையில் இந்தியரான லீனா நாயர், சானல் பிரெஞ்சு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக பதவியேற்றார். இதன் மூலம், பெப்சிகோவின் இயக்குநராக இருந்த இந்திரா நூயிக்கு அடுத்ததாக பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.  இந்தியர்கள் இப்போது பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இயக்குநராக மாறிவருகிறார்கள். மைக்ரோசாஃப்டின்  சத்யா நாதெள்ளா, ஆல்பபெட்டின்  சுந்தர் பிச்சை ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். ஐபிஎம், நோவர்டிஸ், அடோப், ட்விட்டர், ஹார்மன், விமியோ ஆகிய நிறுவனங்களிலும் இந்தியர்கள் இயக்குநர்களாக உள்ளனர். ”பிறப்பு, கல்வி, வேலை என அனைத்து விஷயங்களுக்கும் இந்தியர்கள் போராடி வளர்வதால் இயற்கையாகவே அவர்கள் சிறந்த மேலாளர்களாக இருக்கிறார்கள்” என்றார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆர்.கோபாலகிருஷ்ணன். பியூ நிறுவன ஆய்வுப்படி(2016படி), 77 சதவீத இந்தியர்கள் குறைந்தப்பட்சம் ஒரு பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர் என கண்டறிந்தது. இந்த வகையில் 31 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே பட்டம் பெற்றவர்கள். ”தொழிலை நடத்திச் செல்ல புதுமைத்