இடுகைகள்

பிட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செம்பு, பிளாட்டினத்தின் தோற்றம்!

படம்
  தெரியுமா? செம்பு தொன்மைக் காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய முதல் உலோகம், செம்பு என புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  கி.மு. 8000 இல், அன்றைய மனிதகுலம் கற்களுக்குப் பதிலாக செம்பை பயன்படுத்த தொடங்கினர் என மானிட ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கி.மு. 4000இல், எகிப்தியர்கள்  செம்பை உருக்கி அச்சுக்களில் பயன்படுத்த தொடங்கினர்.  பிற்காலங்களில் செம்புடன்,தகரத்தை சேர்த்து வெண்கலத்தை உருவாக்கப் பயன்படுத்தினர். பொதுவாக செம்பை எளிதாக உருக்கி, பல்வேறு வார்ப்புகளைச் செய்யலாம். இதன் காரணாக, மக்கள் வீட்டுக்குப் பயன்படும் குழாய்களைச் செய்ய செம்பையே நாடினர்.   பிளாட்டினம் 1500களில் ஸ்பெயின் நாட்டினர், பிளாட்டினத்தை முதல்முறையாக கண்டுபிடித்து ஆவணப்படுத்தினர்.  பிளாட்டினா டெல் பின்டோ (Platina del pinto)என்ற வார்த்தையிலிருந்துதான் பிளாட்டினா என்ற வார்த்தை உருவானது. இதற்கு சிறிய வெள்ளி என்று பொருள். மக்கள் தொடக்கத்தில் இதனை, தூய்மைப்படுத்தப்படாத வெள்ளி என்று முதலில் கருதினர்.  சுரங்கத்தில் இரும்பு மற்றும் மெக்னீசியம் மிகுந்துள்ள பாறைகளில் இருந்து பிளாட்டினம் அதிகளவு பெறப்படுகிறது. பொதுவாக பிளாட்டினத்து

பிட்ஸ் - புவியியல்

படம்
  பிட்ஸ்  அமெரிக்காவில் இயங்கும் நிலையில் 18 எரிமலைகள் உள்ளன. இவை அலாஸ்கா, ஹவாய் மற்றும் மேற்கு கடற்புர பகுதிகளில் அமைந்துள்ளன.  மாணிக்கம், நீல மாணிக்கம் ஆகிய இரண்டுமே ஒரே கனிமத்தால் உருவானவை. இதன் பெயர் கொருண்டம் (corundum). வைரத்தை விட அரிதானவை மாணிக்கம், நீலமாணிக்கம், மரகம் ஆகிய கற்கள்.  வைரங்கள் அனைத்துமே ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவை அல்ல. இவை மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு, பழுப்பு, கருநீலம், சாம்பல், கருப்பு என பல்வேறு நிறங்களில் உள்ளன. இப்படி பல்வேறு நிறங்களில் வைரம் இருப்பதை ஃபேன்சிஸ் (fancies) என்று அழைக்கின்றனர். அமெரிக்காவின் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக அலாஸ்கா கண்டறியப்பட்டுள்ளது.   தகவல் https://www.geologyin.com/2016/03/18-geological-facts-that-might-surprise.html

புவியியல் தகவல்கள்!

படம்
  தெரியுமா? ”பூமியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஒத்தது” என்றார்  புவி வேதியியலாளரான பால் அசிமோவ். இதன் தோராய வெப்பநிலை 5,537 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது.  பூமியில் மொத்தமாக 40 டெராவாட்ஸ் (terrawatts) வெப்பம் உருவாகிறது. இதன் மையப்பகுதியில் இருந்து கதிரியக்கத் தன்மை காரணமாக வெப்பம் உருவாகிறது என 2011இல் வெளியான ஆய்வு கூறுகிறது. மையப்பகுதியில் ஆன்டிநியூட்ரினோ (antineutrinos)என்ற துகள் காணப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கதிரியக்கமே வெப்பத்திற்கு காரணம் என புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  "பூமியின் உட்புறத்திலிருந்து வரும் வெப்ப ஆற்றலே அதனை உயிரோட்டமாக வைத்துள்ளது என்றார் அமெரிக்க புவியியல் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் டாம் கிராஃபோர்டு.  தோரியம், யுரேனியம், பொட்டாசியம் " ஆகிய தனிமங்களின் கதிரியக்க தன்மையால் பூமியில் வெப்பம் உருவாகிறது.  உலகமெங்கும் உள்ள பாலைவன தரைகளில் பாசிகள் (mosses) வாழ்கின்றன. இவை தன்னுடைய தனித்துவமாக மூலக்கூறு அமைப்பு காரணமாக காற்றிலிருந்து நீரைப் பெற்று உயிர்வாழ்கின்றன. தனித்துவமான இலைகள் போன்ற அமைப்புக்க

கணிதவியலாளர்கள் 6 பேர் பற்றிய அறிமுகம்!

ஆபிரஹாம் டி மொய்வ்ரே (Abraham De Moivre) பிரெஞ்சு கணிதமேதை ஆபிரஹாம் 1667 ஆம்ஆண்டு மே 26 ஆம் தேதி பிரான்சின் சாம்பக்னே நகரில் பிறந்தார். கணிதத்தில் முறையான பட்டம் பெறாத ஆபிரஹாம், செடானில் கிரேக்க மொழி கற்க புரோடெஸ்டன்ட் அகாடமிக்கு அனுப்பப்பட்டார். கணிதத்தின் தொடக்கப் பாடங்களைக் கற்ற ஆபிரஹாம், 1684 ஆம் ஆண்டு பாரிசுக்குச் சென்று மேல்நிலைக்கல்வியைக் கற்றார். கணிதம் மீது வேட்கை கொண்டதால், அதில் தலைசிறந்த அறிஞரானார். பின்னர் நியூட்டனின் பிரின்சிபியா (Principia) என்ற நூலைப் படித்து ஊக்கம் கொண்டார். ராயல் சொசைட்டியின் அறிமுகம் கிடைக்க, நியூட்டன், எட்மண்ட் ஹாலே ஆகியோரின் நட்பும் கிடைத்தது. மாணவர்களுக்கு கணித வகுப்பு மட்டுமே வருமான ஆதாரம். நியூட்டன் உள்ளிட்ட முன்னோடிகளின் தியரிகளை விரிவுபடுத்தியதோடு டி மொய்வ்ரே சூத்திரம் (De Moivre’s Formula’), பெரிய எண்களின் செயல்பாடுகள் பற்றிய நூல் டாக்ட்ரின் ஆஃப் சான்சஸ் (‘Doctrine of Chances) ஆகியவை கணித துறையில் இவரின் பங்களிப்பு. நன்றி:https://famous-mathematicians.com/abraham-de-moivre/ 2 அடா லவ்லேஸ் (Ada Lovelace) புகழ்பெற்ற கவிஞர் பைரனின்

இந்தியமக்களில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்க காரணம்!- நீர் பற்றாக்குறை - பிட்ஸ்

படம்
  நீர் பற்றாக்குறை - பிட்ஸ் 1. உலகெங்கும் 84.4 கோடி மக்கள்  சுத்தமான நீரைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையை விட இருமடங்கு அதிகம்.  2. உலகில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையால், 2 பில்லியன் மக்கள் மாசுபட்ட நீரைக் குடிநீராக அருந்தி வருகின்றனர்.  3. மாசுபாடான குடிநீரால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, போலியோ ஆகிய நோய்கள் பரவுகின்றன. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு பிரச்னையால் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் பலியாகின்றனர்.  4. 2025ஆம் ஆண்டு,  உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திப்பதோடு, அவர்களின் வாழிடத்திலுள்ள நிலத்தடி நீர்மட்டமும் குறையும் என்று ஐ.நா. ஆய்வு குறிப்பிடுகிறது.  5.வளரும் நாடுகளில் மருத்துவச் சேவைகளைச் செய்வதற்கு தடையாக 22 சதவீதம் நீர்ப்பற்றாக்குறை உள்ளது. இந்நாடுகளில் சுகாதாரப் பணிகள் 21 சதவீதம் பற்றாக்குறையாகவும், கழிவுகளைக் கையாள்வதில் திறனின்மை 22 சதவீதமாகவும் உள்ளது.  6. நமது உலகைச்சுற்றி 70 சதவீத நீர்ப்பரப்பு உள்ளது. அதில், 2.5 சதவீத நீர் மட்டுமே நன்னீர். மீதி முழுக்க கடல்நீர்தான். பூமியிலுள்ள 1 சதவீத நீரை மட்டுமே ந

நோபல் பரிசு பிட்ஸ்!

படம்
1895 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி ஆல்ஃபிரட் நோபல், அறிவியல் துறைகளுக்கான நோபல் பரிசை உருவாக்கினார். பின்னர், 1968 ஆம் ஆண்டு ஸ்வீடன் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கான தனி பரிசை உருவாக்கியது. 1901-2018 காலகட்டத்தில் மட்டும் பல்வேறு அறிவியல் துறைகளுக்கு 590 முறைகள் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் பரிசு அதிகபட்சமாக மூன்று நபர்களை உள்ளடக்கியது. பரிசுத்தொகை இவர்களுக்கு சம பங்காக பிரித்தளிக்கப்படும். தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் உள்ளடங்கலாக 935 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் துறைகள் மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் 52 முறை, பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசு சான்றிதழை ஸ்வீடன், நார்வே ஓவியக்கலைஞர்கள் மற்றும் கலியோகிராபி கலைஞர்கள் உருவாக்குகின்றனர். சிறையில் இருப்பவர்களுக்கும் கூட நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி (மியான்மர்),   பத்திரிகையாளர் கார்ல் வான்  ஒசிட்ஸ்கி (ஜெர்மனி), மனித உரிமை செயற்பாட்டாளர் லியு ஜியாபோ(சீனா) ஆகியோர் இம்முறையில் நோபல் பரிசு பெற்றனர்.

நியூஸ் பிட்ஸ்! - மும்பையில் இறந்த சேமிப்பு மன்னர்!

படம்
சேமிப்பு மன்னர்! மும்பையில் ரயில் பாதையில் இறந்துகிடந்த பிச்சைக்காரரிடம் 11.5 லட்சம் ரூபாய் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானைப் பூர்விகமாக கொண்ட பிராடிசந்த் பன்னாராம்ஜி  என்று பெயர் அறியப்பட்டுள்ளார். இவர்,  நாணயங்களாக 1.75 லட்சமும், வைப்புத் தொகையாக 8.77 லட்சரூபாயும், சேமிப்புக்கணக்கில் 96 ஆயிரம் ரூபாயும் சேமித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சூழல் போராட்டம்! உலகமெங்கும் அரசுகளுக்கு எதிரான சூழல் போராட்டம் வெடித்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சட்டமறுப்புஇயக்கமாக சூழலியலாளர்கள் தெருக்களில் அமைதியாகக் கூடி போராடி வருகின்றனர். லண்டனில் இருநூறுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தூய்மையான கங்கை! 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய்மையான கங்கை திட்டத்தொகை ஐந்து ஆண்டுகளில் 15 மடங்கு உயர்ந்துள்ளது. மத்தியஅரசு 2015-2020 காலகட்டத்தில் தூய்மைப்பணிக்காக 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. தற்போது நமாமி கங்கா திட்டத்தொகை 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார் தூய்மை கங்கை திட்ட இயக்குநரான ராஜீவ் ரஞ்சன் மிஷ்ரா.

அகிம்சைச் சுடர் காந்தி! - காந்தி 150

படம்
pinterest காந்தி! காந்தி படிப்பில் சுமாரான மாணவர்தான். கணக்கில் நன்றாகப் படித்தவர். புவியியல் பாடத்தில் தடுமாறினார். காந்திக்கு பதிமூன்று வயதில் திருமணமானது. இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துபோக, அதிலிருந்து குழந்தை திருமணங்களை தீவிரமாக எதிர்த்து வந்தார் காந்தி. காந்தியின் ஆங்கில ஆசிரியர் அயர்லாந்துக்காரர். எனவே அவரின் ஆங்கிலம், ஐரிஷ் தன்மை கொண்டிருக்கும். காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹென்றி டேவிட் டோரியு முன்மாதிரி. இவரைப் பற்றிய போராட்டச் செய்திகளை காந்தி சிறையில் படித்து அறிந்தார். 1930 ஆம் ஆண்டு காந்தி முதல் இந்தியராக டைம் பத்திரிகையில் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி அமைதிக்கான நோபலுக்கு ஐந்துமுறை (1937,1938,1939,1947,1948) பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் பரிசு வழங்கப்படவில்லை. 2006 ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது. தன்னை பிறர் புகைப்படம் எடுப்பதை கடுமையாக வெறுத்தவர் காந்தி. ஆனால், அவரது காலத்தில் அதிகம் புகைப்படம் எடுக

பிட்ஸ் - குத்துச்சண்டையில் சாதித்த ஆபிரகாம் லிங்கன்!

படம்
பவேரியா நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கர்கள் 1740 ஆம் ஆண்டு ரகசியக் குழு ஒன்றைத் தொடங்கினர். இவர்கள் குறிப்பிட்ட அறைக்குள் வருவதற்கு கதவைச் சுரண்டி சிக்னல் கொடுப்பது வழக்கம்.  ஆபிரகாம் லிங்கன் அரசியல்வாதியாக புகழ்பெறுவதற்கு முன்னர் குத்துச்சண்டை வீரராக புகழ்பெற்றிருந்தார். 300 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியைச் சந்தித்திருந்தார்.  இருபதாம் நூற்றாண்டில் மங்கோலியாவில் விநோத தண்டனை வழக்கிலிருந்தது. குற்றவாளிகளை மரப்பெட்டியில் வைத்து பூட்டிவிடுவார்கள். இதனால் பலர், பெட்டியிலிருந்து வெளியே வர முடியாமல் பட்டினி கிடந்து இறப்பது சாதாரண நிகழ்ச்சி.   1923 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பெல்மாண்ட் பார்க்கில் குதிரைப்பந்தயம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற வீரர் ஃபிராங்க் ஹாயெஸ், போட்டியின் பாதியில் மாரடைப்பால் இறந்தார். ஆனால் அவரது குதிரை உயிரற்ற உடலைச சுமந்து சென்று வெற்றிக்கோட்டை தொட்டதுதான் பிரமிக்க வைக்கும்  செய்தி.  1945 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் ராணுவ டாங்கிகளில் தேநீர் தயாரிக்கும் வசதி உருவாக்கப்பட்டது.  அடால்ஃப் ஹிட்லர், முசோலி

பிட்ஸ் - இஸ்ரோவின் சாதனைகள்!

படம்
இஸ்ரோ - சாதனைத் துளிகள் 1981ஆம் ஆண்டு, இஸ்ரோவின் ஆப்பிள் செயற்கைக்கோள் மாட்டுவண்டியில் வைத்துக் கொண்டுவரப்பட்டது. மோட்டார் வண்டிகளில் கொண்டு வரும்போது, அதிலுள்ள உலோகங்களோடு ஆன்டெனாவின் சிக்னல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர். 2013 ஆம் ஆண்டு இஸ்ரோ, செவ்வாயை ஆராய்வதற்கான விண்கலமாக மங்கல்யானை விண்ணில் ஏவியது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற இத்திட்டத்தின் செலவு 450 கோடி ரூபாய். 2008ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்ற சந்திரயான் 1, நிலவில் தடம் பதித்த நாடுகளில் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குக் கொடுத்தது. இஸ்ரோ கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்த பணிகளுக்கான செலவுத்தொகை, நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அடங்கிவிடும். இஸ்ரோவின் வர்த்தக ராக்கெட் ஏவும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் (Antrix), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. 2016 -2019 வரையில் 239 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, 6,289 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.  இஸ்ரோ, பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சுபார்கோ தொடங்கியபிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டது. இன்று இஸ்ர

இயற்பியல் பிட்ஸ்!

படம்
நீர் ஒரே நேரத்தில் சூடாகவும் மாறும் உறையவும் செய்யும். இதனை  டிரிபிள் பாயிண்ட் (Triple point)என்று கூறுகின்றனர். வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக நீர் திட, திரவ, வாயு நிலைகளுக்கு மாறும். மூக்கு கண்ணாடிகள் இல்லாதபோது, உங்கள் கையில் உள்ள விரல் இடைவெளியில் பார்க்கும்போது, எதிரிலுள்ள பொருட்களை ஓரளவு தெளிவாக காணமுடியுமாம். கி.மு.650 ஆம் ஆண்டு கிரேக்கர்களால் உருவான அறிவியல் துறை இயற்பியல். Physics  என்ற வார்த்தைக்கு இயற்கையிலிருந்து பெற்ற அறிவு என்று பொருள். நவீன ஜிபிஎஸ் முறை தொழில்நுட்பம் ஐன்ஸ்டீனின் E=MC 2 சூத்திரப்படி இயங்குகிறது.செயற்கைக் கோள்கள், ரேடியோ அலைகள் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றன. தகவல்: MinutePhysics படம் - கிராபிக் ரிவர் - பின்டிரெஸ்ட் ஸ்

வாசிப்பு மற்றும் பொருளாதாரம் பிட்ஸ்!

படம்
பிட்ஸ்! வாசிப்பு நவீன தலைமுறை இளைஞர்கள்  92% சதவீதம் பேர் தங்களுக்குப் பிடித்த விஷயங்களைக் குறித்து இணையத்தில் தேடிப் படிக்கின்றனர். இவர்களின் இணைய வாசிப்பு என்பது இவர்களின் பெற்றோர்களை விட அதிகம். பதிப்பகத்துறை சரிவடைந்து வருவதாக பலர் கூறுகின்றனர். ஆனால், புதிய தலைமுறை வாசகர்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது உண்மை. அமெரிக்கர்கள் தனிநபராக நூலுக்குச் செலவிடும் தொகை 110 டாலர்கள். படிக்கச் செலவிடும் தோராய நேரம் 15.6 நிமிடங்கள். ஆண்டுக்கு ஒரேயொரு புத்தகம் படித்த அமெரிக்கர்களின் சதவீதம் 74. பொருளாதாரம் ஆர்பிஐ யின் இலச்சினை, கிழக்கிந்திய கம்பெனியின் இலச்சினையான Double Mohur ஐ முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆர்பிஐயின் நிதி ஆண்டு என்பது நடப்பு ஆண்டின் ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை ஆகும். ரிசர்வ் வங்கியின் முதல் துணை ஆளுநராக(2003) நியமிக்கப்பட்ட பெண்மணி, கே.ஜே. உதேசி(KJ Udeshi). 1938 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்தது. நன்றி: பிரின்ச்.காம், ஸ்டேட்ஸ்டா.காம்