இந்தியமக்களில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்க காரணம்!- நீர் பற்றாக்குறை - பிட்ஸ்
நீர் பற்றாக்குறை - பிட்ஸ்
1. உலகெங்கும் 84.4 கோடி மக்கள் சுத்தமான நீரைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையை விட இருமடங்கு அதிகம்.
2. உலகில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையால், 2 பில்லியன் மக்கள் மாசுபட்ட நீரைக் குடிநீராக அருந்தி வருகின்றனர்.
3. மாசுபாடான குடிநீரால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, போலியோ ஆகிய நோய்கள் பரவுகின்றன. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு பிரச்னையால் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் பலியாகின்றனர்.
4. 2025ஆம் ஆண்டு, உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திப்பதோடு, அவர்களின் வாழிடத்திலுள்ள நிலத்தடி நீர்மட்டமும் குறையும் என்று ஐ.நா. ஆய்வு குறிப்பிடுகிறது.
5.வளரும் நாடுகளில் மருத்துவச் சேவைகளைச் செய்வதற்கு தடையாக 22 சதவீதம் நீர்ப்பற்றாக்குறை உள்ளது. இந்நாடுகளில் சுகாதாரப் பணிகள் 21 சதவீதம் பற்றாக்குறையாகவும், கழிவுகளைக் கையாள்வதில் திறனின்மை 22 சதவீதமாகவும் உள்ளது.
6. நமது உலகைச்சுற்றி 70 சதவீத நீர்ப்பரப்பு உள்ளது. அதில், 2.5 சதவீத நீர் மட்டுமே நன்னீர். மீதி முழுக்க கடல்நீர்தான். பூமியிலுள்ள 1 சதவீத நீரை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். 0.007 சதவீத நீரைப் பயன்படுத்தி 680 கோடி மக்களுக்கான உணவு, எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் கட்டாயம் உள்ளது.
7.உலகளவில் 80 சதவீத நிலத்தடி நீர் ஆதாரத்தை பாகிஸ்தான் பயன்படுத்திவருகிறது. 2010ஆம் ஆண்டு பயிர்களை விளைவிக்க மட்டும் 7.3 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீரைப் பயன்படுத்தியுள்ளது.
8. உலகளவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நாடுகளில் சீனா (102%), அமெரிக்கா (31%),இந்தியா (23%), ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
9. தேயிலை, காபி, அரிசி, பருத்தி ஆகிய பயிர்களைப் பயிரிடவே அதிக நீர் செலவாகிறது. ஒரு கப் காபியைத் தயாரிக்க 132 லிட்டர், ஒரு கப் தேநீரைத் தயாரிக்க 34 லிட்டர், 453 கிராம் அரிசியை விளைவிக்க 4542 லிட்டர், 453 கிராம் பருத்தியை விளைவிக்க 45,424 லிட்டர் நீர் செலவாகிறது.
10. சுகாதாரமான குடிநீர் வசதி கிடைக்காமல், இந்தியாவில் ஆண்டுதோறும் 2 லட்சம் மக்கள் இறக்கின்றனர். 75 சதவீத மக்கள் இன்றும் சுகாதாரமான குடிநீர் வசதியைப் பெறமுடியாமல் உள்ளனர் என்று நிதி ஆயோக் அமைப்பு கூறியுள்ளது.
தகவல்: lifewater.org,who.int,wateraid.org
கருத்துகள்
கருத்துரையிடுக