வாரிசுரிமையை நிரூபிக்க லார்கோ வின்ச் நடத்தும் போர்! - என்பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள்
சென்னை புத்தகத்திருவிழா 2021
நந்தனம் ஒய்எம்சிஏ
என்பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள்
லயன் முத்து காமிக்ஸ்
கதை, ஓவியங்கள்
பிலிப் பிரான்க், ஜீன் வான் ஹாமே
லார்கோ வின்ச் - லயன் முத்து காமிக்ஸ் |
லார்கோ வின்ச் கதை தொகுதியில் இது முதலாவது புத்தகம். நெரியோ என்ற பணக்காரர், தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் ஊழலைக் கண்டுபிடிக்கிறார். அதேசமயம் இப்படி நேர்ந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் அவர் முன்னமே யோசித்து வைத்துள்ளார். அந்த முதல் காட்சியில் அவர் பேசுவதே முழுக் கதையையும் படிக்க வைப்பதற்கான உத்வேகத்தையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது.
நெரியோ திருமணம் செய்துகொள்ளாத ஆள். ஆனால் அவருக்கு ஒரு வாரிசு உண்டு. இதனை டபிள்யூ குழும ஆட்கள் ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது. அதேநேரம் இளைஞனை தொழிலில் மூத்த ஆட்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அதேதான் அவரை எப்படியாவது முடித்துவிட்டு நிறுவனத்தை தங்கள் கையில் கொண்டு துடிக்கிறார்கள். சொத்துக்காக நடைபெறும் பெரும் போரே...என் பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள் என்ற இரு
கதைகளும்.
முதல்கதையில் நாயகனின் அறிமுகமும், அவனது இளமைக்காலமும் இயல்பாக காட்டப்படுகிறது. ஆனால் நொரியோ அவரை த த்தெடுத்தபிறகு அனைத்து உறவுகளும் சுயநலமாக மாறிவிடுகின்றன. அதில் ஏற்படும் உளவியல் ரீதியான விலகலையும் லார்கோ பாத்திரம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. நண்பர்களே இல்லாமல் தனியாக வளர்வது, பள்ளிக்கூடத்தை கைவிடுவது, தனக்கு நெருக்கமாக உறவுகளை தவிர்த்துவிட்டு பெரும் நிறுவனத்தை வளர்ப்பதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்வது என லார்கோவின் பல்வேறு வாழ்க்கை சமாச்சாரங்கள் நடப்பு நிகழ்வின்போது, முன்னும் பின்னும் சொல்லப்படுகிறது.
முதல்கதையில் துரோகத்தை வெல்லும் லார்கோ, அடுத்த கதையில் தனது நண்பனே துரோகியாக மாறுவதை எதிர்கொள்கிறார். எப்படி அவனை சமாளித்து தனது நிறுவனத்தைக் கையகப்படுத்துகிறார் என்பதுதான் மையப்புள்ளி. அத்தனை ரத்தம் தெறிக்கும் போராட்டத்திலும் எதற்கு போராடுகிறோம் என்பதற்கான காரணம் லார்கோவின் மனதில் உள்ளது. அதை அவரது அப்பா சொல்லித் தந்திருக்கிறார்.இப்போராட்டத்திற்கு அவர் கொடுக்கும் விலைதான் திகைக்க வைக்கிறது. இரண்டாவது கதையில் மனப்போராட்டத்திற்கு அதிக இடம் கொடுத்திருக்கிறார்கள். இறுதிப்பகுதியில் செம ட்விஸ்ட் உள்ளது.
லார்கோ, 562 நிறுவனங்களைக் கொண்ட டபிள்யூ குழுமத்தின் தலைவர் சந்திப்பின்போது காட்சிகள் இளமைக்காலமும், நடப்புமாக இருப்பது புதுமையான ஒன்று. ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ள உத்தி இது. இவருக்கு நெருக்கமானவரான சைமன், ஜான் ஸெல்லிவன் ஆகியோர் சித்தரிக்கப்படுகிறார்கள்.
துரோகம், வஞ்சகம், கொலை, காதல், அதனை மிஞ்சும் காமம் என காமிக்ஸை படிக்க எடுத்தால் கீழே வைக்கவே முடியாது.
நன்றி
லயன் முத்து காமிக்ஸ்
பாலபாரதி
கருத்துகள்
கருத்துரையிடுக