பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு!

 




flying lets go GIF by John Artur



பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு

கோள்களிலிருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்தது என அறிவியல் செய்திகள் படிக்கும்போது பலருக்கும் சந்தேகம் வரும். அதென்ன ரேடியோ சிக்னல்கள் என்று. விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளோடு கிடைக்கும் ரேடியோ அலைகளைத்தான் அப்படி வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

பால்வெளியிலிருந்து பல்வேறு அடையாளம் காணப்படாத செயல்பாடுகளின் விளைவாக , வரும் ரேடியோ அலைகளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வானியலாளர்கள் குழப்பத்துடன் பார்த்து வந்தனர். இன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ரேடியோ ஆன்டனாவில் தினசரி பத்திற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகள் பதிவாகி வருகின்றன. 

ரேடியோ அலைகள் பால்வெளியில் எப்படி உருவாகின்றன?  பிரகாசமான பொருளிலிருந்து வரும் ஒளி, எலக்ட்ரான்களையும் வேறு பல துகள்களையும் கொண்டுள்ளது. இது பழைய துகள்களை உடைத்து மின்காந்த அலை ஊடகத்தை உருவாக்குகிறது. இதிலுள்ள எலக்ட்ரான்கள் ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன என்பதே ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கை. இது பற்றிய ஆய்வு அறிக்கை arxiv.org வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது. 

2015 ஆம் ஆண்டு கனடாவின் மெக்கில் பல்கலையைச் சேர்ந்த வானியல் மாணவர் ஸ்கோல்ஷ், ரேடியோ அலைகளைக் குறித்து ஆராய்ச்சி செய்துவந்தார். நவ.5 அன்று ரேடியோ அலை ஒன்றை கணினித் திரையில் கண்டார். பல்லாயிரம் கி.மீ. தொலைவிலிருந்து வந்த அந்த ரேடியோ அலையை ஆராயத் தொடங்கினர். ரேடியோ அலைகள் அரிதானவை அல்ல. இதை எழுதிக்கொண்டிருக்கும் போதும் ரேடியோ அலைகள் பூமிக்கு வந்துகொண்டிருக்கின்றன. 

பாக்ஸ் 

ரேடியோ அலைகள் வருவதற்கான வழிகள்

பால்வெளியிலுள்ள இரண்டு பொருட்களின் மோதலால் வெளியாகும் ஆற்றலில் ரேடியோ அலைகள் தோன்றலாம். 

பால்வெளியின் மையத்தில் உள்ள கருந்துளை, துகள்களால் ஆனது. இதிலிருந்து வெளிவரும் நெருப்பு, கதிர்வீச்சு ஆகியவற்றிலிருந்து ரேடியோ அலைகள் உருவாகலாம்.

தூசி, துகள்களான கோள்கள் அல்லது ஒளியிழந்த நட்சத்திரங்களிலிருந்து ரேடியோ அலைகள் வெளிவருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேற்றுகிரக மனிதர்களின் விண்கலங்களிலிருந்து வெளிவருகிறது என்றும் கூறுகின்றனர். 

பால்வெளியில் உருவாகி பூமிக்கு வரும் ரேடியோ அலைகள் காந்தப் புலத்தை உருவாக்குகின்றன. இந்த காந்தப்புலத்தின் சக்தியை எப்படி கணக்கிடுவது என  1831 ஆம் ஆண்டு கார்ல் ஃபிரைட்ரிச் காஸ் (Carl Friedrich Gauss) மதிப்பீட்டு அளவை உருவாக்கினார். இவர், ஜெர்மனியைச் சேர்ந்த கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வாளர்.

ச.அன்பரசு

நன்றி: நியூ சயின்டிஸ்ட்  






 






கருத்துகள்