டாப் 5 வானியல் அமைப்புகள்

 


Earth, Space, Sunlight, Sun Rays, Sunrise, Sunshine



டாப் 5 வானியல் அமைப்புகள்

ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா (Jyotirvidya Parisanstha (JVP)) – 

ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா, மகாராஷ்டிராவின்  புனேவில் அமைந்துள்ள  அமைப்பு. 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பரிசன்ஸ்தா, வானியலை மக்களிடையே பிரசாரம் செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளது.

http://jvp.org.in/ 

அஸ்ட்ரானாமிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Astronomical Society of India (ASI) )

1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வானியல் ஆர்வலர்களுக்கான அமைப்பு. நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டத்தில் வானியலின் முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் விவாதிக்கப்படுகின்றன.  TIFR, IISER, IISc, IIT, ISRO, PRL , IIAP உள்ளிட்ட அரசு அமைப்புகளில் பணிபுரியும் ஆய்வாளர்களும் வானியல் சொசைட்டியில் முக்கியமான அங்கம். 

அசோஷியேசன் ஆஃப் பெங்களூரு அமெச்சூர் அஸ்ட்ரானமர்ஸ் (ABAA) 

பெங்களூருவைச்  சேர்ந்த இந்த அமைப்பு, 1976 ஆம் ஆண்டு உருவானது. இந்த அமைப்பு, தொலைநோக்கி குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. வான் இயற்பியலில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களின் சங்கம் இது. வாரம்தோறும் ஞாயிறு அன்று சந்தித்து வான் இயற்பியல் துறையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். 

http://abaaonline.blogspot.com

பெங்களூரு அஸ்ட்ரானாமிகல் சொசைட்டி (BAS)

பெங்களூரூ வானியல் சொசைட்டி, 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு முழுக்க இணையத்தில் செயல்பட்டு வருகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், கூகுள் குழுக்கள் வழியாகச் செயல்படுகின்றனர். செய்திகள், விவாதங்கள் என இணையத்தில் பரபரக்கிறது இக்குழு. ஆண்டுக்கு ஒருமுறை இந்த சொசைட்டி உறுப்பினர்கள் ஒன்றுகூடி, பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்வது வழக்கம். 

அமெச்சூர் அஸ்ட்ரானாமர் அசோஷியேஷன் டெல்லி(AAAD)

டெல்லியில் செயல்பட்டு வரும் வானியல் ஆர்வலர்களின் சங்கம் இது. தீன் மூர்த்தி பவன் அருகில் அமைந்துள்ள அமைப்பு, வாரம்தோறும் ஞாயிறு அன்று சந்தித்து செய்திகளைப் பற்றி உரையாடுகின்றனர். பல்வேறு வானியல் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதில் புகழ்பெற்ற அமைப்பு இது. 

 http://aaadelhi.org/


கருத்துகள்