சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி?
சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி? இந்தியா, சீனாவுக்கு இடையில் பிரிட்டிஷார் வகுத்த எல்லைக்கோட்டை சீன பொதுவுடைமைக் கட்சியும், அரசும் ஏற்கவில்லை. 1949ஆம் ஆண்டு, சீனாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து மக்கள் சீன குடியரசு உருவாகிறது. அதை இந்திய அரசு அங்கீகரித்தது. சீன அரசுக்கு பிரிட்டிஷார், ஜப்பான் ஆகியோரின் தாக்குதலால் தங்களை வலுவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற வேட்கை உருவாகியிருந்தது. அதை சீனா, நவீன காலத்தில் பெருமளவு நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. சீனக்கனவு என அதை குறிப்பிடுகிறார்கள். 1962ஆம் ஆண்டு சீனா, எல்லையில் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றுகிறது. இது இந்தியாவின் மீது மாவோவின் போர் என அழைக்கப்படுகிறது. மார்க்சிய லெனினியவாதிகள் இதை எப்படி விளக்குவார்களோ தெரியவில்லை. இதற்குப் பிறகு, சீனாவின் அனைத்து செயல்பாடுகளும் சந்தேகத்திற்குரியவையாக மாறிவிட்டன. அல்லது அரசியல்வாதிகள் அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று கூறத்தொடங்கினர். குறிப்பாக, இந்து பேரினவாத கட்சி தலைவர்கள். சீனா, இந்தியாவை எல்லையில் தோ...