இடுகைகள்

சந்தைக்கு புதுசு ! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீடியோ எடிட்டிங்கிற்கான லேப்டாப்கள்!

படம்
வீடியோ எடிட்டிங் என்பது இன்றைக்கு முக்கியமான இளைஞர்களின் வேலைவாய்ப்பு தகுதியாக பார்க்கப்படுகிறது. காரணம், அனைத்து விஷயங்களும் இன்று எழுத்துக்களை விட வீடியோ வடிவில் பகிரப்படுகிறது. எனவே அதற்கான விஷயங்களை உடனே நீங்கள் செய்வது அவசியம். இதற்காகவே உதவும் லேப்டாப் ஐட்டங்களை இங்கே பகிர்கிறோம். மேக் புக் புரோ  16 இன்ச் திரை கொண்ட லேப்டாப். விலை ஆப்பிள் வகைக்கு உண்டானபடி அதிகம்தான். அமேசானில் செக் செய்து விலையை சோதித்துக்கொள்ளுங்கள். மென்பொருட்கள், வன்பொருட்கள் அனைத்துமே மேக்கில் சூப்பராக இருக்கும் என்பதால் எந்த ஃபார்மேட் வீடியோவையும் நீங்கள் எடிட் செய்து அதகளப்படுத்தலாம். புதிய மேம்படுத்தப்பட்ட கீபோர்டு நன்றாக இருக்கிறது. ஹெச்பி என்வி  லேப்டாப்களில் ஆல்ரவுண்டர் இதுதான். விலைக்கு ஏத்த பணியாரம்தான் என்றாலும் ருசிக்கிறது. 4கே வீடியோ வசதி கிடையாது.முழு ஹெச்டி திரை வீடியோ வேலைக்கு அம்சமாக இருக்கிறது. எடை 1.3 கிலோதான். 4 ஜிகா ஹெர்ட்ஸ் ஐ 5 - ஐ 7 சிப்கள் 1080 வீடியோவை எடிட் செய்வதற்கு எந்த பிரச்னையும் சொல்லவில்லை. ஆனால் அதற்கு மிஞ்சிய தரத்திலான வீடியோக்களை எடிட் செய்யும்போது திணறுகிற

புத்தாண்டில் ஸ்டேசனரி!

படம்
புது ஆண்டில் தினசரி காலண்டர், டைரி, மாத காலண்டர் என ஓசி கேட்டு சோர்ந்துபோய் இருப்பீர்கள். அதற்குள் மாதத்தில் பாதி நாட்கள் கழிந்து பொங்கல் வந்துவிட்டது. பேட்ட விஸவாசத்திற்கு பேனர் வைத்துவிட்டார்கள். இதுதான் பாஸ் வாழ்க்கை. இம்முறை ஓசி கேட்காமல் கம்பெனி போடும் பொங்கல் போனஸ் 500 ரூபாயை ஏற்றுக்கொண்டு வாங்கவேண்டிய ஸ்டேசனரி பொருட்கள் இவை. தி டெஸ்க் மேட்(beat root) பெரிதாக நினைக்கவேண்டாம். டீ குடிக்கும் பீங்கானை பென் ஸ்டாண்ட் ஆக்குவோம் இல்லியா, அதேதான். கருப்பு, பச்சை நிறங்களில் கிடைக்கிறது. காசை சேர்த்து பேங்குகளை காப்பாற்றாமல் 649 ரூபாய் கொடுத்து வாங்குங்கள். ஆல் பர்பஸ் டைரி(supple room) பேனா வைப்பதற்கான இடத்துடன் வெளியாகியுள்ள டைரி இது. கோடு போட்டது, போடாதது, புள்ளி வைத்த ஸ்டைல் என வகை வகையாக வெளியாகியுள்ளது. விலை ரூ. 1399. நோ நான்சென்ஸ் காலண்டர்(origin one) தேவையில்லாத விளம்பரங்கள்(வசந்த் அண்ட் கோ) இல்லாத காலண்டர். முக்கியமான விடுமுறைகளை கவனமாக குறித்து வைத்திருக்கிறார்கள். லூனார், சீன காலண்டர் முறைகளும் இதில் உண்டு. ரூ. 2500 பெரிய பென்சில் பேனா லீக் அடிக்கிறதா?