புத்தாண்டில் ஸ்டேசனரி!


Image result for beatroot teapot pen stand




புது ஆண்டில் தினசரி காலண்டர், டைரி, மாத காலண்டர் என ஓசி கேட்டு சோர்ந்துபோய் இருப்பீர்கள். அதற்குள் மாதத்தில் பாதி நாட்கள் கழிந்து பொங்கல் வந்துவிட்டது. பேட்ட விஸவாசத்திற்கு பேனர் வைத்துவிட்டார்கள். இதுதான் பாஸ் வாழ்க்கை.

இம்முறை ஓசி கேட்காமல் கம்பெனி போடும் பொங்கல் போனஸ் 500 ரூபாயை ஏற்றுக்கொண்டு வாங்கவேண்டிய ஸ்டேசனரி பொருட்கள் இவை.

தி டெஸ்க் மேட்(beat root)

பெரிதாக நினைக்கவேண்டாம். டீ குடிக்கும் பீங்கானை பென் ஸ்டாண்ட் ஆக்குவோம் இல்லியா, அதேதான். கருப்பு, பச்சை நிறங்களில் கிடைக்கிறது. காசை சேர்த்து பேங்குகளை காப்பாற்றாமல் 649 ரூபாய் கொடுத்து வாங்குங்கள்.


ஆல் பர்பஸ் டைரி(supple room)

பேனா வைப்பதற்கான இடத்துடன் வெளியாகியுள்ள டைரி இது. கோடு போட்டது, போடாதது, புள்ளி வைத்த ஸ்டைல் என வகை வகையாக வெளியாகியுள்ளது. விலை ரூ. 1399.

நோ நான்சென்ஸ் காலண்டர்(origin one)

தேவையில்லாத விளம்பரங்கள்(வசந்த் அண்ட் கோ) இல்லாத காலண்டர். முக்கியமான விடுமுறைகளை கவனமாக குறித்து வைத்திருக்கிறார்கள். லூனார், சீன காலண்டர் முறைகளும் இதில் உண்டு. ரூ. 2500

பெரிய பென்சில்

பேனா லீக் அடிக்கிறதா? பிடிங்க ப்ரோ பென்சிலை. சென்டிமீட்டர் அளவுகோல், ஷார்ப்பனருடன் கிடைக்கும் பென்சிலின் விலை ஜஸ்ட் 50 டாலர்கள்தான்.

இயற்கை இங்க்

மான்ட்பிளாங்கின் இயற்கையான இங்க் வகை. தென் அமெரிக்காவின் அரிய மூலிகையிலிருந்து இங்க் கிடைக்கிறதாம். விலை 4,700.

நன்றி: லிவ் மின்ட்(வத்சலா ஷிப்பெர்)