அதிகரிக்கும் விவாகரத்து- என்ன பிரச்னை?
விவாகரத்து ஈஸி - பெண்களின் புதிய வாழ்க்கை இதுதான்.
இந்தியாவில் திருமணமாகாமல் இருப்பவர்களை எப்படி பாக்டீரியா, வைரஸ் போல பார்க்கிறார்களோ, அதே நிலைமைதான் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்களுக்கும்.
2017 ஆம் ஆண்டு இந்தியாவில் விவாகரத்து அளவு 1% என இருந்தது இன்று அதிகரித்திருக்கிறது. அதாவது, ஆயிரத்து ஒருவர் என்ற நிலைமை ஆயிரத்து பதிமூன்று என கூடியிருக்கிறது. மனதளவில் இது எப்படி? என பார்த்தால் அதிர்ச்சியாகிறது.
விவாகரத்து பெற்ற நாளை பார்ட்டி வைத்து கொண்டாடும் மனநிலையில் இப்பெண்கள் இருக்கிறார்கள். அவ்வளவு எளிதாக உறவு உடைதலை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இதற்கு அன்புடன் அந்தரங்கம் பகுதிக்கு கடிதம் எழுதிப்போட்டு முடிவு எடுக்கவில்லை. பொருளாதார சுதந்திரத்தினால் அவர்களாகவே முடிவு எடுக்கிறார்கள். சுயமாக முடிவெடுக்க பெண்களுக்கு இன்று முடிகிறது என்பது சற்று ஆசுவாசமளிக்கிற விஷயம்.
மகராஷ்டிரம், குஜராத், ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் விவாகரத்து விஷயங்களில் முன்னணி வகிக்கின்றன. விவாகரத்து என்றால் தனிப்பட்ட விஷயம் என பொத்தியெல்லாம் வைப்பது அந்தக்காலம். விவாகரத்தை அறிவிப்பதே சமூக வலைதளத்தில்தான். இன்ஸ்டாகிராம் கவிதை பாடி, பார்ட்டி வைத்து விவாகரத்தை கூட்டமாக கொண்டாடிக் களிக்கிறது ஜென் இசட் பெண்கள் கூட்டம்.
உலகளவில் பெண்கள் விவாகரத்து செய்யும் அளவு 1960-2017 ஆம் ஆண்டு வரை 44 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தங்களது உறவு குறித்து வெளிப்படையாக ஃபேஸ்புக்கில் பேசுபவர்களின் எண்ணிக்கை உலகளவில் 6.3 மில்லியன், இந்தியாவில் ஒரு லட்சத்து பத்து ஆயிரம்(ஆண்கள் - 88 ஆயிரம், பெண்கள் 22 ஆயிரம்)
விவாகரத்து செய்தி குறித்த பக்கங்களை பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் அதிகம். உலகளவில் இந்த எண்ணிக்கை 31 ஆயிரமாக உள்ளது.
பெண்களுக்கு சட்டப்பூர்வ ஆலோசனைகளை வழங்கவென வொர்த்தி வுமன் அண்ட் டைவர்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கமே செயல்பட்டு வருகிறது. யெஸ் பம்மல் கல்யாண சுந்தரம் போல குடும்பங்களை பிரிக்க நிறைய சிம்ரன்கள் இங்கு காத்திருக்கிறார்கள். என்ன காரணம், சுதந்திரம் முக்கியம் என்ற சிந்தனைதான்.
”என் அம்மாவுடன் என்னுடைய நாட்களை கழிக்க நினைத்தேன். ஆனால் அதற்கு என்னுடைய திருமணம் தடையாக இருந்தது. நான் அதனைக் கடந்து வந்துவிட்டேன்” எனும் ஜான்வி சோனையா, பத்திரிகையாளர். இவர் பிறந்த குஜராத் கிராமத்தில் இந்த வார்த்தைகளை பேச முடியாது. தற்போது அகமதாபாத்தில் வசிக்கிறவர், துணிச்சலாக சமூக வலைதளத்தில் விவாகரத்து குறித்து கவிதை எழுதிப்போட்டு ஆதரவு குவிய திருமண உறவை உடைத்து எறிந்திருக்கிறார்.
”நான் விவாகரத்து பெற்றதும், என்னைச் சுற்றியுள்ளவர்கள் நான் பேசுவது அனைத்தும் அந்த துயரத்திலிருந்து மீளவில்லை என நினைக்கத் தொடங்கினர். குறிப்பாக என் மகனது பள்ளியிலிருந்து வந்த கேள்விகளை எந்த ரகத்தில் குறிப்பிடுவது என்றே புரியவில்லை ” என்கிறார் விளம்பரத்துறையில் பணியாற்றும் வாணி கபிர். பள்ளியில் அவரது மகனுக்கு சரியானபடி பீஸ் கட்டமுடியுமா? என்பதிலிருந்து பல சிக்கலான கேள்விகளைக் கேட்டு சித்திரவதை செய்திருக்கிறார்கள்.
நன்றி: எகனாமிக் டைம்ஸ் - மேகசின் - ஷெபாலி பட்