பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி -




Image result for sex ratio of birth in state drops to 840 from 935 in nearly 10 years


ஆண் - பெண் பாலின விகிதம் வீழ்ச்சி! 

செய்தி:  தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆண் - பெண் விகிதம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவில் ஆண் - பெண் பிறப்பு விகிதம் குறித்து வெளியான ஆய்வில் தென் மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்த ஆய்வில் பொதுவாக ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் பின்தங்கியிருந்தன. தற்போது இந்திய அரசின் பதிவுத்துறை எடுத்துள்ள ஆய்வுப்படி(2016),  பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் ஆந்திரம், ராஜஸ்தான் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

தமிழகம் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரத்தில் 6 வது இடம் பிடித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் 930 என்றிருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 840 ஆக குறைந்துள்ளது.  ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிஷா, உத்தர்காண்டு ஆகிய மாநிலங்களில் பெண்குழந்தைகளின் சதவீதம் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ”தென்மாநிலங்களில் 2007 ஆம் ஆண்டைவிட பெரும் சரிவை பிறப்பு சதவீதம் கண்டுள்ளது. பிறப்பை சரியான முறையில் அரசுத்துறையில் பதிவு செய்யாததும்  சரிவுக்கு காரணம்” என்கிறார் தன்னார்வலரான சாபு ஜார்ஜ்.

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - ரேமா நாகராஜன்