வாக்களிப்பது இங்கு எளிது





Image result for india elections 2019

தேர்தல் என்பது முன்னர் போல கிடையாது. நேராக பள்ளிக்கு வந்து கியூவில் நின்று இந்தியாவின் எதிர்காலம் பற்றி கவலைப்பட்டு ஓட்டு ஏமாறுவது தற்போது மாறிவருகிறது. சீட்டுகள் போய் வாக்கு எந்திரங்கள் வந்தது போலவே வாக்களிப்பதும் மாறிவருகிறது பிற நாடுகள் எப்படி?

அமெரிக்கா

அமெரிக்காவில் வாக்காளர்கள் தேர்தல் நாளில் அங்கு இருக்க முடியாத சூழல் என்றால் அதற்கென விண்ணப்பித்து முன்னதாகவே விண்ணப்பிக்க முடியும். ஆனாலும் பனிரெண்டு மாநிலங்கள் இதனை அனுமதிப்பதில்லை. 28 மாநிலங்களில் தேர்தல் அன்று வரமுடியாதவருக்கு பதிலாக அவரின் அனுமதி பெற்ற மற்றொருவர் வாக்களிக்கலாம். ஒரேகான், வாஷிங்டன், கொலராடோ ஆகிய மாநிலங்களில் மின்னஞ்சல் வழியாக வாக்களிக்க முடியும்.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் வாக்களிக்க விரும்பும் அந்நாட்டு குடிமகன், அஞ்சல் வாக்கை செலுத்த முடியும். சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஏன் வாக்களிக்க முடியாது என விளக்கம் தரச்சொல்லி அரசு கேட்கும். ராணுவம் அல்லது வேலை என தேர்தல் அன்று இங்கிலாந்தில், வேல்ஸில், ஸ்காட்லாந்தில் இருக்கவே முடியாது என்றால் அதற்கான அனுமதியைப் பெற்றால் உங்கள் வாக்கை உங்களுக்கு பதிலாக யாரையாவது வைத்து பதிவு செய்யலாம். பதிலியான ஆள் உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்.



ஜெர்மனி

ஜெர்மனி இதில் கடுமை காட்டுகிறது. தகுதியான வாக்காளர் என்றால் நீங்கள் வாக்குச்சாவடியில்தான் வாக்குகளை பதிவு செய்யவேண்டும். தபால் வாக்கு என்பதை அரசு பெரும்பாலும் விரும்புவதில்லை.


நியூசிலாந்து

சரியான நேரத்திற்கு உங்களால் தேர்தல் மையத்தை அணுகி ஓட்டு போடமுடியவில்லை. உடனே டென்ஷனாகி பார் பக்கம் ஒதுங்கி விரக்தியை தணிக்க அவசியமில்லை. நீங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அழைத்து சொன்னீர்கள் என்றால் அவர்களே குழுவினரை அனுப்பி ஓட்டுக்களை பெறுவார்கள். மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக பார்வையற்றோர் போன் வழியாக ஓட்டுகளை பதிவு செய்யலாம். தபால் வழியாகவும் ஓட்டுகளை பதிவு செய்ய வசதிகள் நெகிழ்வாக உள்ளன.


ஆஸ்திரேலியா

இந்நாட்டிலும் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஓட்டுகளை பதிவு செய்ய விதிகள் படி வாய்ப்புள்ளது. ஆனால் பொதுத்தேர்தலுக்கு இம்முறைகள் பயன்படாது.


எஸ்டோனியா

ஐ வோட்டிங் என்ற வசதியை எஸ்டோனியா 2005 ஆம் ஆண்டு அமல்படுத்தியுள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வாக்குகளை பதிவு செய்யும் வசதியை இந்நாடு அளிக்கிறது.



இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்யாதபோது, வாக்கு சதவிகிதம் பெருமளவு வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளது. தேர்தல், வாக்கு என்ற ஒன்றுக்காக மட்டும் ஊருக்கு வந்து செல்ல விரும்புவதில்லை. இந்த மனநிலை ஆபத்தானது என பிரசாரம் செய்வதை விட எளிதாக ஒட்டளிக்க அரசு உதவி செய்வது அவசியம்.


நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா