அடிப்படை ஊதியம்(Ubi) தர இந்தியா தயாரா?




Image result for rythu bandhu
படம்: நியூஸ் கிளிக்



தெலுங்கானாவில் மாநில அரசு அமல்படுத்திய ரைத்து பந்து திட்டம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு மீண்டும் அதிகாரத்தை தந்திருக்கிறது. இது இந்தியா, அடிப்படை ஊதியம் திட்டத்தை வறுமையில், வேலையின்மையில் தவிப்பவர்களுக்கு அமலாக்கலாமே என யோசிக்க வைத்துள்ளது.

இது நிறையப்பேர் நினைப்பது போல விவசாயக்கடன் போல அரசுக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல. ரைத்து பந்து திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு விவசாயி செய்யும் முதலீட்டுக்கு அரசு 4 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இதே திட்டத்தை இந்தியா முழுக்க அரசு அமலாக்கினால் 3.1 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடலாம்.

2011 யுனிசெஃப் செய்த ஆராய்ச்சிப்படி பெரியருக்கு 300, சிறுவர் ஒருவருக்கு நூற்றைம்பது என மாதம் முந்நூறு ரூபாய் கொடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவாகும் என்பது கணக்கு. இந்த தொகையை அதிகரித்தால் அரசு பிற நலத்திட்டங்களை கைவிட்டாக வேண்டிய சூழல் ஏற்படும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றலாமா என்பதிலும் நிறைய குழப்பம் நிலவுகிறது. சரியா, தவறா, அடிப்படை ஊதியத்திற்கு மாற்றா என்பதிலும் பொருளாதார வல்லுநர்களே தடுமாறுகிறார்கள்.

அடிப்படை ஊதியத்திற்கு(3சதவிகிதம்) அதாவது, உள்நாட்டு உற்பத்தியில் (GDP),கிராம வேலைவாய்ப்பு(0.33%), பொதுவிநியோகமுறை(0.84%), உரமானியம்(0.4%), பெட்ரோல் மானியம்(0.15%) என அரசு செலவிடுகிறது. 

வயதானவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, விதவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அரசு தரலாம். குழந்தைகளுக்கு ஆறாயிரம் ரூபாய் எனும் கணக்கில் அரசு உள்நாட்டு உற்பத்தியில் செலவிடுவது 1.3% சதவிகிதம்தான் என்கிறார் பொருளாதார வல்லுநர் ரீத்திகா கெரா.

மத்திய அரசை முந்தி மாநில அரசுகளே அடிப்படை ஊதியத்தை வெவ்வேறு வடிவங்களில் வழங்கி வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.  மானிய உதவிகளை வங்கியில் பெறுவதை உறுதி செய்த இருவர் கௌசிக் பாசு மற்றும் அர்விந்த் சுப்பிரமணியன் என்பது நீங்கள் மறக்க கூடாத தகவல்.

நன்றி: லிவ் மின்ட் - ததிட் குண்டு