ஏன்?எதற்கு?எப்படி? - விஆர் ஹெட்செட் பயன்படுத்தலாமா?
SF |
ஏன்?எதற்கு?எப்படி?
விஆர் ஹெட்செட் ஆபத்தானவையா?
ரெடிபிளேயர் ஒன் படம் போல மெய்நிகர் உலகை காட்டும் திறன் கொண்டது விஆர் ஹெட்செட். மிதமிஞ்சி பயன்படுத்தினால் என்றைக்குமே ஆபத்துதான். அது தலைவலியைத் தருகிறது என்று புகார்கள் கிளம்பியுள்ளன. 3டி யை எடுத்துக்கொள்ளுங்கள். காட்சிகள் சினிமா தியேட்டரில் பிரமாதமாக இருந்தாலும் சிறிது நேரத்திலேயே நம் கண்களுக்கு பொருந்தாத அக்காட்சிகளின் முப்பரிமாணம் கண்களை வருத்துகிறது. அதே விஷயம் விஆர் ஹெட்செட்டுக்கும் பொருந்தும்.
அண்மையில் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் விஆர் ஹெட்செட்டைப் பயன்படுத்திய சிறுவர்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்னை ஏற்பட்டதாக ஆய்வு முடிவை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் விஆர் ஹெட்செட் பிரச்னை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நிஜ உலகை மறந்து விளையாட்டுக்குள் புக முக்கியமான விஷயம், கண்களை மறைப்பது. விஆருக்கான படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏ.ஆர். ரஹ்மான் தான் இயக்கிய படத்தை இம்முறையில் வெளியிடும் ஐடியாவை கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.